பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

glycinuria

498

Gnedel's sign


glycinuria : சிறுநீர் கிளைசின் : சிறுநீரில் கிளைசின் வெளியே றுதல்.

glycogen : கிளைக்கோஜன் : இழைமங்களின் பழச்சீனி போன்ற பொருளை உண்டாக்கப்பயன்படும் பொருள்.

glycogenase : கிளைக்கோஜினேஸ் : கிளைக்கோஜனை குளுக்கோசாக மாற்றுவதற்குத் தேவையான ஒரு செரிமானப் பொருள் (என்ஸைம்) நொதி.

glycogenesis : கிளைக்கோஜனாக்கம் : இரத்தக் குளுக்கோசிலிருந்து கிளைக்கோஜன் உருவாதல்.

glycogenolysis : கிளைக்கோஜன் பகுப்பு : கிளைக்கோஜன் பகுபட்டுக் குளுக்கோசாக மாறுதல்.

glycogenosis : கிளைக்கோஜன் பெருக்கம் : கிளைக்கோஜன் அளவு அதிகரிக்கும் வளர்சிதை மாற்றக் கோளாறு.

glycolysis : கிளைக்கோஜன் சிதைவு : உடலிலுள்ள சர்க்கரை நீரின் துணையினால் சிதைந்து கூறுபடுதல்.

glycopaenia : சர்க்கரைக் குறைபாடு : ஒர் உறுப்பில் அல்லது திசுவில் சர்க்கரைப் பற்றாக் குறையாக இருத்தல்.

glycopyrrolonium : கிளைக்கோப்பைரோலோனியம் : செயற்கை நச்சுக்காரம் போன்ற ஒரு மருந்து. எனினும், இது நச்சுக்காரம் போன்று இதயத்துடிப்புக் கோளாறு ஏற்படுவதில்லை.

glycosides : கிளைக்கோசைட்ஸ் : காடி, காரங்களின் மூலம் பழ வெல்லம் போன்ற பொருள்களைத் தரும் தாவரப் பொருள் வகை.

glycosuria : சிறுநீர்ச் சர்க்கரை; சிறுநீரில் குருதிச் சர்க்கரை; சர்க்கரை நீரிழிவு : சிறுநீரில் அதிக அளவில் சர்க்கரை இருத்தல்.

glycyrrhiza : அதிமதுர வேர் : இதிலிருந்து மருந்தாகவும், திண் பண்டமாகவும் பயன்படும் கருநிறப்பொருள் எடுக்கப்படுகிறது.

glymidine : கிளைமைடின் : நீரிழிவு நோய்க்கு வாய்வழி கொடுக்கப்படும் ஒரு மருந்து.

gnat : ஒலுங்கு : இரட்டைச் சிறகுடைய கொசு இனத்தைச் சேர்ந்த நுண்ணிய பூச்சி.

gnathalgia : தாடை வலி.

gnathoplasty : தாடை பிளாஸ்டிக் மருத்துவம்; தாடை ஒட்டு அறுவை : தாடையில் செய்யப்படும் பிளாஸ்டிக் அறுவை மருத்துவம்.

Gnedel's sign : நெடல் குறுயீடு : அறுவை மருத்துவத்தின்போது மயக்க மருந்தின் நிலைகளைக் குறிக்கும் ஒரு முறை. அமெரிக்க மயக்க மருந்தியலறிஞர் ஒருவர் உருவாக்கிய முறை.