பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

malleolus

660

Malpighian layer


malleolus : கணு எலும்பு

malleus : காதின் சுத்தி எலும்பு : காதுச் சவ்வின் அதிர்ச்சியை உட் காதுக்குள் ஊடுபரவ விடும் எலும்புப் பகுதி.

Mallory bodies : மால்லோரி உள்துகள்கள் : ஈரல் உயிரணுக் களிலுள்ள குருதிச் செவ்வணுத் திசுப்பாய்ம உள் துகள்கள். இவை கடுமையான ஆல்ககாலில் ஈரல் காயத்தில் காணப்படுகின்றன. அமெரிக்க நோயியலறிஞர் ஃபிராங்க் மல்லோரி பெயரால் அழைக் கப்படுகிறது.

Mallory-Weiss syndrome : மால்லோரி-வெயிஸ் நோய் : உணவுக் குழாயின் கீழ் நுனியில் அல்லது இரைப்பை-உணவுக் குழாய் சந்திப்பில் ஏற்படும் சளிச்சவ்வுக் கிழிசல், இது குறிப்பாகக் குடிகாரர்களிடம் கடும் வாந்தி உண்டாகும் போது ஏற்படும். இதனால் குருதிப் போக்கு உண்டாகும். இது அமெரிக்க நோயியல் அறிஞர் கென்த் மால்லோரி, அமெரிக்க மருத்துவ அறிஞர் சோமா வெயிஸ் ஆகியோர் பெயரால் அழைக்கப்படுகிறது.

malnutrition : ஊட்டச்சத்துக் குறைபாடு; ஊட்டக் குறை; குறை யூட்டம்; ஊட்டக்கேடு : சத்துக் குறைவான உணவு உட்டச் சத்துப் பற்றாக்குறை.

malocclusion : முரண்தாடை : தாடைகளை மூடும் போது மெல் தாடைப் பற்களும் கீழ்த் தாடைப் பற்களும் முறையாக ஒன்றிணையாமல் இருத்தல்.

Malpighian body : மால்பிகியன் உள்துகள் : 1. போமன் பொதி யுறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு நரம்புத்திரளை உள்ளடக்கிய சிறுநீரகக் குருதியணு, 2. மண்ணிரலிலுள்ள நிணநீர்க் கரனை.

Malpighian layer : மால்பிகியன் அடுக்கு : மேல்தோல் உள்அடுக்கு அதாவது, பெருமூளை உயிர்