பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mammose

662

manipulation


மார்பகத்தை மறு சீரமைப்பு செய்வதற்கும், சிறிய மார்பகங்களை விரிவுபடுத்துவதற்கும் இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.

mammose : பருத்த மார்பகம் : 1. மிகவும் பருத்த மார்பகம் கொண்டிருத்தல், 2. ஒரு மார்பகம் போன்று வடிவம் கொண்டிருத்தல்.

mammothermography : மார்பக வெப்பக்கதிரியக்கப் பதிவு : மார்பகத்தின் மட்டுமீறிய வளர்ச்சியைக் கண்டவறிவதற்கு மார்பகத்தை ஆராய்வதற்கு வெப்பக் கதிரியக்கப் பதிவு முறையாகப் பயன்படும் ஒரு நோய் நாடல் நடைமுறை.

mammotropīn : மார்பக விளைவு : மார்பகத்தில் ஏற்படும் பாதிப்பு.

Mandelamine : மாண்டிலாமின் : மாண்டெலிக் அமிலத்தின் வணிகப் பெயர்.

mandelic acid : மாண்டெலிக் அமிலம் : சிறுநீர் நோய் நுண்மத்தடை மருந்தாகப் பயன் படுத்தப்படும் அம்மோனியம் உப்பு.

mandible : கீழ்த்தாடை எலும்பு : கீழ்த்தாடையாக அமைந்துள்ள பெரிய எலும்பு. இது ஒரு வளைவான எலும்பையும் இரு செங்குத்தான இழைமங்களையும் கொண்டிருக்கும். இவை உடலை செங்கோணங்களில் இணைக்கின்றன. மேலேயுள்ள விளிம்பு, கீழேயுள்ள 16 பற்களுக்கான பொருத்துக்குழிகளைக் கொண்டிருக்கும்.

Mandrax : மாண்ட்ராக்ஸ் : மெத்தாக்குவாலோன் டைஃபென் ஹைட்ராமின் இரண்டும் கலந்த மருந்து.

mania : மூளைக்கோளாறு; உளக்கிளர்ச்சி; வெறி; மிதமை : மன மாறாட்டக் கோளாறு பேரார்வம் மட்டுமீறிய ஆவல். உணர்ச்சி ஆர்வ மிகுதி.

maniac : பித்தர் : அறிவிழந்தவர்; பைத்தியம் பிடித்தவர்; வெறியர்.

maniac-depressive psychosis : வெறி-ஏக்க உள்நோய்; மாற்றுப் பித்தக்கோளாறு : இடையிடையே நன்னிலையுடன் மாறிமாறிக் களிப்பு, சோர்வு, வெறிகள் உண்டாகும் பித்தக் கோளாறு.

manifest : வெளிப்படு.

manifestation : வெளிப்பாடு : ஒரு நோயுடன் தொடர்புடைய நோய்க்குறி அல்லது அடையாளம் இருப்பது வெளிப்படையாகத் தோன்றுதல்.

manipulation : கையாள்தல்; செய்மை; செய்திருத்தம் : 1. கையி னால் கையாளும் ஒரு நடை முறை. 2. ஒரு கூட்டு உத்திகளை திரட்டுதல். 3 மற்றொரு ஆளை தன் செல்வாக்கின் கீழ் கொண்டு வருதல்.