பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Marburg disease

664

masochism


டைவு நிலை. இது எலும்பு நலிவு, பன்முக எலும்பு முறிவுகள், மண்டையோட்டு எலும்புத் துளை ஆகியவற்றில் மட்டு மீறிய எலும்பு வளர்ச்சி ஆகியவற்றின் தொடக்க நிலை. இதனால், விழிப்பிதுக்கம், கண் குருடு, செவிட்டுத் தன்மை, மூளை நீர்க்கோவை ஆகியவை உண்டாகும்.

Marburg disease : பசுங்குரங்கு நோய் : நோய்க் கிருமியினால் கடும் தொற்று நோய் காய்ச்சல் திடீரென வருவதும் விடுவதும், தலைவலியும், தசைக் கீல்வாத மும் இதன் அறிகுறிகள், 5-7 நாட்களில் கட்டிகள் தோன்ற லாம். இந்த நோய்க்கிருமி உடலில் 2-3 மாதங்கள் வரை இருக்கக்கூடும். இந்நோய் கண்டவர்களில் 30% பேருக்கு மரணம் விளைகிறது.

Marburg virus disease : மார்பக் கிருமி நோய் : நோயுற்ற குரங்குத் திசுக்களுடன் நேரடித் தொடர்பு ஏற்படுவதால் கிருமியினால் உண்டாகும் ஒரு குருதிப் போக்குக் காய்ச்சல். இது ஜெர்மனியிலுள்ள மார்பக்கில் முதல் முதலில் கண்டறியப்பட்டது.

marcain : மார்க்கேய்ன் : பூப்பி வணிகப் பெயர்.

Marcus Gunn syndrome : மார்க்கஸ் கன் நோய் : இது ஒரு பிறவி நோய். இதில வாயைத் திறந்ததும் அல்லது தாடையை ஒரு பக்கம் அசைத்ததும் இமைத் தொய்வு மறைந்து விடும். தாடை அசைவுக் கோளாறு.

Marevan : மாரிவான் : குருதிக் கட்டுக்கு எதிராக வாய்வழி கொடுக்கப்படும் மருந்து.

margin : ஓரம்; விளிம்பு.

Marjolin's ulcer : மார்ஜோலின் அழற்சிப் புண் : கடுமையான அழற்சிப் புண்ணின் விளிம்பில் உண்டாகும் உக்கிரமான வளர்ச்சி ஃபிரெஞ்சு அறுவை மருத்துவ வல்லுநர் ஜீன் மார்ஜோலின் பெயரால் அழைக்கப்படுகிறது.

marmite : மார்மைட் : காரச் சத்திலிருந்து (நொதி) எடுக்கப்படும் ஒரு செறிவுப் பொருளின் வணிகப் பெயர். இதில் வைட்ட மின்-B தொகுதி கிரா முக்கு 15 மி.கி, நியாசின், நிக்கோட்டின் அமிலம் கிராமுக்கு 165 மி. கி, ஃபோலிக் அமிலம் அடங்கியுள்ளது.

Marplar : மார்ப்பிளான் : ஐசோ கார்போக்சோசிட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

marrow : மச்சை நல்லி : எலும்பிற்குள் இருக்கும் மென்மையான கொழுப்புப் பொருள்.

marrow bone : மச்சை எலும்பு.

marsupialization : பையமைவு.

masochism : வன்மைப் பாலின்பம் : கொடுமை செய்வதை ஏற்று