பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

metaloprotein

681

metatarSUS


அமிலச்சங்கிலித் தொடரில் உலோக அயனி அடங்கிய ஒர் செரிமானப் பொருள்.

metaloprotein : உலோகப்புரதம் : புரதத்துடன் உலோக அயனி இணைந்திருத்தல், குருதிச் சிவப்பணு இதற்கு எடுத்துக்காட்டு.

metamere : ஒத்திசைவு உயிரணு : ஒத்திசைவான உயிரணுக் கூறு களின் ஒரு தொடர்வரிசையில் ஒன்று.

metamorphosis : உருமாற்றம் : வடிவம், கட்டமைப்பு, செயற்பணி ஆகியவற்றில் ஒருமாறுதல் ஏற்படும் உருமாற்றம்.

metaphase : மையக்கருச்சவ்வு இழப்பு : உயிர்மப் பிளவியக்கத்தில் ஒரு நிலை. இதில் மையக் கருச்சவ்வு இழப்புக்குறைபாடு ஏற்படுதல்.

metaplasia : முதிர்ந்த திசு : வயது முதிர்ந்த உயிரணுக்களில் ஒரு வகை இன்னொரு வகையாக மாறுதல். முக்கியமாக மேல் தோலிழைம உயிரணுக்கள் இவ்வாறும் மாற்றமடையும்.

metaplasm : செயலற்ற ஊன்மப் பொருள் : மஞ்சள்கரு போன்ற ஊன்மத்தில் காணப்படும் செயலற்ற பொருள்கள்.

metapsychology : இயல்கடந்த உளவியல் : உடலுக்கும் உள் ளத்துக்குமிடையிலான தொடர்பு போன்ற உளவியல் சட்டங்களுக்கு அப்பாடல் உள்ளவற்றை விவரித்துக் கூறும் முயற்சி.

metaraminol : மெட்டாராமினால் : தாழ்ந்த குருதியழுத்த அதிர்ச்சி யின்போது பயன்படுத்தப்படும் சுரப்பிகளை இயங்க வைக்கும் இயக்கு நீர் மருந்து.

metatarsaigia : திரிபுப்பாதம் : பாதத்திலுள்ள வலி. உடல் எடை தவறாகப் பகிர்ந்தளிக்கப் படுவதன் காரணமாக ஏற்படும் இயல்பு மீறிய பாதம்.

metastasis : உறுப்பிடை மாற்றம்; நோய் இடமாறல்; மாற்றிடம் புகல் : கட்டிகளை உண்டாக்கும் உயிரணுக்கள் உறுப்புகளிடையே இடமாற்றம் பெறுதல்.

metatarsus : கால்விரல் எலும்புகள்; அடிக் கால் எலும்பு :