பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/713

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

naevus

712

naked granuloma


உறை முளை அழற்சி. இதில் உயிரிகள், மூக்குக்கும், நோய்க் குறியில்லாத நோய்ப் பரப்பிகள் மூலம் தொண்டைக்கும் பரப்பப்படுகின்றன.

naevus : மச்சம்; மறு; மச்சக் கட்டிகள்; தட்டை மச்சம் :' தோலில் நிறமிகளை உண்டாக்கும் உயிரணுக்களிலிருந்து அல்லது இரத்த நாளங்கள் அளவுக்கு மீறி வளர்ச்சியடைவதன் காரணமாக தோலில் உண்டாகும் வட்ட வடிவ மறு.

naevus, capillary : தந்துகி மச்சம்.

nafcillin : நாஃப்சிலின் : பெனிசிலினேசை எதிர்க்ககூடிய செயற் கைப் பெனிசிலின். இது சங்கிலிக் கிருமிகளை உற்பத்தி செய்யும் பெனிசிலினேஸ் மூலம் உண்டாகும் நோயின் போது பயன்படுத்தப்படுகிறது.

Naffziger's method : நாஃப்சிகர் முறை : நீர்க்கசிவற்ற வறட்டுக் கண்ணழற்சியை ஆராய்ந்தறி வதற்கான முறை. இதில், நோயாளியை உட்கார வைத்து, அவருக்குப் பின்புறம் நின்று கொண்டு, தலை பின்புறமாகத் திருப்பப்படுகிறது. தலையைப் பிடித்துக்கொண்டு கண்விழி கள், கண்புருவ விளிம்குள் பார்வைத் தளமட்டத்தில் இருக்குமாறு வைத்துக் கூர்ந்து ஆராயப்படுகிறது. அமெரிக்க அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஹோவர்ட் நாஃப்சிகர் பெயரால் அழைக்கப்படுகிறது.

naftidrofuryl oxalate : நாஃப்டி டிராஃபுரில் ஆக்சாலேட் : இரத்த அழுத்தம் மாறுதலடையாமல் இரத்தம் பாயும் அளவை அதிகரிக்கும் மருந்து. இது மூளை மற்றும் புறநிலைக் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் பக்க விளைவுகளாகத் தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் உண்டாவதாகக் கூறப்படுகிறது.

nail : நகம்; உகிர் : 1. விரல்கள், கால் விரல்கள் போன்ற கூரு ணர்வுடைய முனைகளை மூடியிருக்கும் மேல்தோல் பூண். 2. முறிந்த எலும்புத் துண்டுகளைப் பிணைபபதற்கான அறுவைச் சிகிச்சையில் பயன் படுத்தப்படும் ஒரு மெல்லிய உலோகத்தகடு.

nail, bed : நகத்தளம்.

nailing : ஆணிப்பிணைப்பு:;ஆணியடிப்பு : முறிந்த எலும்பை ஆணி மூலம் பொருத்துவதற்கான அறுவை மருத்துவ முறை.

naive : எளிமை நலமுடைய : சூதுவாது அறியாத, இயல்பான எளிமையுடைய.

naked granuloma : வெற்றுப் புடைப்பு : லாங்கான்ஸ் அசுர உயிரணுக்களும், ஒற்றைக் கருமையம் உடைய உயிரணுக்க