பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/768

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

operating room

767

opthalmoplegia


பில் அறுவை மருத்துவம் செய்யும் நடவடிக்கை.

operating room : அறுவை மருத்துவ அறை.

operating table : அறுவை மருத்துவ மேசை.

operating theatre : அறுவை மருத்துவ பேரவை.

operation, caesarean : சீசரிய அறுவை.

operation, sterilisation : கருத் தடை அறுவை.

operidine : ஆப்பெரிடின் : ஃபெனோப்பெரிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

operon : பொதுத் தொடர்பு மரபணு : பாக்டீரியாவிலுள்ள, ஒரு பொதுவான ஒர் இயக்க மரபணுவையும், தொடர்புடைய செயல் முறையைக் கொண்ட கட்டமைப்பு மரபணுவுடன் நெருங்கிய தொடர்புடைய இனக்கீற்றின் ஒரு கூறு.

opthalmia (ophalmitis) : கண் நோய்; கண்ணழற்சி : கண்ணில் ஏற்படும் வீக்கம். கண்ணுளைச்சல்.

opthalmia, moonatorum : சிசு கண்ணழற்சி.

opthalmiatrics : கண் நோய் மருத்துவவியல்.

ophiasis : வழுக்கைப் பரவுதல் : மயிரிழப்புப் பட்டைகள்,உள்ள படியான முடி எல்லைக் கோட்டினுள் முக்கியமாகப் பொட்டெலும்பு மற்றும் பின் உச்சி மண்டலத்துக்குள் நீண்டிருத்தல்.

ophthalmencephalon : பார்வை மண்டலம் : விழித்திரை, பார்வை நரம்பு, மூளையின் பார்வைச் சாதனம் ஆகியவை அடங்கிய தொகுதி.

opthalmic : கண்ணோய் மருந்து; கண் சார்ந்த : கண்ணோய் போக்கக் கூடிய மருந்து, கண்ணழற்சி கண்டுள்ள கண்ணில் வீக்கம் ஏற்பட்டுள்ள.

opthalmitis : கண்ணழற்சி.

opthalmodynamometry : விழித்திரை அழுத்த அளவீடு : விழித் திரைத் தமனி அழுத்தத்தை அளவிடுதல்.

opthalmologist : கண் மருத்துவர்; கண் இயல் வல்லுநர் : கண் ணோய் மருத்துவ வல்லுநர்.

opthalmology : கண் மருத்துவம் : கண்ணோய்களைக் கண்டறிதல், அவற்றைக் குணப்படுத்துதல் பற்றிய ஆய்வியல். கண் நோயியல்.

opthalmoplegia : கண்தசை வாதம் : கண்ணை இயக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தசைகளில் ஏற்படும் வாத நோய்.