பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

adcentitia

80

aerobiology


செய்யப்படும் அறுவை மருத்துவம். இதில், ஒருக்கணிப்புத் திசைக்கு எதிரிலுள்ள தசை நாண்களைப் பிரித்தெடுத்து, வெள்விழிக் கோளத்தின் புறத்தோலுடன் பொருத்தித் தைத்து விடுகிறார்கள்.

adventitia : குருதி நாளப் புறத் தோல; குருதிக்குழாய் வெளிப்படலம் : இதயத்திலிருந்து குருதியைக் கொண்டு செல்லும் நாளமாகிய தமனியின் அல்லது இதயத்திற்குள் குருதியைக் கொண்டு செல்லும் நாளமாகிய சிரையின் மேலுறைத் தோல்.

adventitious : இடம்மாறிய : இயல்பற்ற; மறபற்ற.

இயல்பற்ற சுவாச ஒலிகள் : இவ்வொலிகள் நோய்நிலையில் மட்டுமே கேட்கப்படும். நோயற்றவரிடம் இவை கேட்கப்படுவதில்லை. இவ்வொலிகள் நுரையீரல்களிலிருந்தோ, நுரையீரல் உறையிலிருந்தோ எழும்பலாம்.

adverse reaction : விரும்பத்தகாத (விளைவு) வினை : விரும்பத் தகாத பின்விளைவு. ஒரு மருந்தை உடலில் செலுத்தும் போது உண்டாகின்ற ஒரு வகை விரும்பத்தகாத விளைவு. (எ-டு.) பெனிசிலின் ஊசி மருந்தைச் செலுத்தும் போது ஏற்படும் கடும் ஒவ்வாமை.

adynamia : உயிராற்றல் அழிவு : படுகிடை நிலை.

Aedes : எய்டெஸ்; கொசுக் குடும்பம் : பெரும்பாலான கொசுக்கள் நோய்க் கடத்திகளாக செயல்படுகின்றன. (எ-டு.) எய்டெஸ் எகிப்தி : மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் கொசு இனம்.

AEG : காற்று மூளை இயக்கப் பதிவு : மூளையின் இயக்கத்தை ஒரு காற்றுக் கருவிமூலம் பதிவு செய்தல்.

aeglemasmeles : வில்வம்.

aerate : காற்றூட்டல்.

aeration : வளியூட்டம்; காற்றூட்டல்; காற்றூட்டம் : உயிர்ப்பு மூலம் குருதியுடன் ஆக்சிஜன் கலக்கும்படி செய்தல்.

aerial : வான்வழி.

aerial velocity : வான்வழி திசை வேகம்.

aerobacter : ஏரோபேக்டர் : எண் டிரோபேக்டீரியாவின் குடும்பம்.

aerobe : ஆக்சிஜன் உயிரி ; உயிர்வளி உயிரிகள்; காற்றுயிரி : உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் (O2) தேவைப்படுகிற ஒர் நுண்ணுயிரி.

aerobic : காற்றுயிரிய.

aerobio#ogy : ஆக்சிஜன் உயிரியல்; உயிரிவளி உயிரியல் : காற்றில் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகள், நுண்ணணுச்