பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/912

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

psychogalvanometer

911

psychopathology


psychogalva nometer : மன மின்னோட்டமானி : உணர்ச்சித் தூண்டல்களின் விளைவாக தோலில் தோன்றும் மின் தடை மாற்றங்களைக் கண்டறியும் ஒரு கருவி.

psychogenesis (psychogony) : மனத் தோற்ற வளர்ச்சி : மனத்தின் தோற்ற வளர்ச்சி; மனதில் கருத்து உருத்தோற்றம்.

psychogenic : உளவியல் குறிகள் : உடம்பில் அல்லாமல் உள்ளத்தில் தோன்றும் உளவியல் குறிகள்.

psychological diseases : உளவியல் நோய்கள் : மனம் விளைவிக்கும் உடல் நோய்கள்.

psychological moment : உற்ற வேளை : மனத்தைத் திறம்படக் கவர்ந்து ஆட்படுத்துவதற்குரிய துல்லியமான காலக்கூறு.

psychogeriatric : மூப்பு உளவியல் சார்ந்த; முதியோர் உள மருத்துவம் : மூப்பியல் மருத்துவம் தொடர்பான உளவியல் சார்ந்த.

psychologist : உளவியலறிஞர் : மன இயல்புகளையும் இயக்கங் களையும், விளைவுகளையும் ஆராயும் அறிஞர்.

psychology : உளவியல் : உள இயல்பு நிலை, இயக்கங்களையும் விளைவுகளையும் ஆராயும் அறிவியல் துறை மருத்துவத்தில் மனித நடத்தையை ஆராயும் துறை.

psychometry : உற்றறி பண்பாற்றல் : தொடுவதன் மூலம் பொருள்களின் அல்லது ஆட்களின் உள்ளியல்புகளை அறியும் ஆற்றல்.

psychomotor : உளவியல் தசை இயக்கம்; உளவியக்க : உள ஆற்றல் மூலம் தசைப் பகுதியை இயங்கும்படி செய்தல்.

psychoneurosis : தொடக்கச் சித்தப் பிரமை; உள நரம்பியம் : சித்தப் பிரமையின் தொடக்க நிலை.

psychopath : மனநோயாளி; உளப்பிறழ்வு; உளக்குழப்பம் : மனநிலை திரிந்தவர் உளநோயாளி.

psychopathic personality : உளநோய் ஆளுமை : இடையறாத மனக்கோளாறு அல்லது உள்ள ஊமை. இந்த நோயாளிகள், முரட்டுத்தனமாகவும், பொறுப்பற்ற முறையிலும் நடந்து கொள்கிறார்கள். இதற்கு மருத்துவச் சிகிச்சை தேவை.

psychopathist : உளநோய் மருத்துவம்.

psychopathology : உளநோய் ஆய்வியல்; உள நோயியல் : இயல்பு மீறிய உளவியல் நோய்கள் பற்றிய ஆய்வியல்.