பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/933

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rebreathing

932

Recklinghausen's..


விரைவான தகவல் உய்த்துணரும் செய்முறை தேவைப்படுகிறது.

rebreathing : மீள் மூச்சிழுப்பு : ஒரு மூடப்பட்ட வெளிக்குள் முன் மூச்சு விடும்போது வெளிப்படுத்திய வாயுவை உள்ளிழுத்தல்.

recalcitrant : முரண்வாத எதிர்ப்பு நோயாளி : மருத்துவத்துக்கு ஒத்துழைக்காமல் எதிர்ப்புத் தெரிவித்து முரண்டுபிடிக்கும் நோயாளி.

recal : நினைவு கூர்தல்; மீட்டறிதல் : நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக்கொண்டு, தேவையானபோது நினைவுபடுத்திக் கொள்ளுதல்.

recannulation : வீரிய நிலைப்பாடு : ஒரு நாளத்தின் வீரியத்தை மீண்டும் நிலைநாட்டுதல், அடைத்திருக்கும் குழாயை சீர்செய்து திரவ ஒழுக்கு மீண்டும் ஏற்படச் செய்தல்.

receptaculum : ‘தேக்கப்பை' கொழுப்புப்பை : முதல் வயிற்றுப்பக்க முதுகெலும்பின் முன்புள்ள மார்பக நிணநீர்க் குழலின் தொடக்கத்திலுள்ள பேரிக்காய் வடிவப் பை இது குடலிலிருந்து சீரணித்த கொழுப்பை ஏற்றுக் கொள்கிறது.

receptive sensory aphasia : உணர்வுப் பேச்சிழப்பு : கேட்கும் சொற்களுக்கு எந்தப் பொருளும் கொள்ள முடியாமலிக்கும் மூளை சார்ந்த நோய். இந் நோயாளி சைகை, எழுத்து, ஒவியம் போன்ற செய்தித் தொடர்பு வடிவங்களைப் புரிந்து கொண்டாலும் பேசும் சொற்களைப் புரிந்து கொள்வ தில்லை.

receptor : ஏற்பி : நரம்புத் தூண்டுதல்களை ஏற்று, அனுப்பக்கூடிய உணர்வு நரம்பு வேதியியல் பொருள்கள், மருந்துகளை ஏற்றுச் செயல்படும் அனுப்பகுதி.

recessive : மரபியல்பு மறைவ; அடங்கிய; மங்கிய : மரபாகத் தோன்று பண்பியல்புகள் தலைமுறைக்குத் தலைமுறை குறைந்து கொண்டு வந்து இறுதியில் மறைந்துவிடுதல்.

recipient : பெறுநர்; ஏற்பான்; ஏற்பி.

Recklinghausen's disease : எலும்பழற்சி நோய் : துணைக் கேடயச் சுரப்பி அளவுக்குமீறிச் செயற்படுவதன் காரணமாக உண்டாகும் எலும்பழற்சி நோய். இதனால் எலும்புகளில் கால்சியம் குறைந்து நீர்க்கட்டிகள் உண்டாகும். தோலில் நிறப் புள்ளிகளும் ஏற்படும். இதனை 'ரெக்ளிங்க் ஹாசன் நோய்' என்றும் கூறுவர்.