பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/958

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Robin Hood..

957

roller bandage


Robin Hood syndrome : ராபின் ஹூட் நோயியம் : பணக்காரர் களிடமிருந்து திருடி ஏழைகளுக்குக் கொடுத்த ஆங்கில மக்கள் கதாநாயகன் ராபின் ஹூட் பெயரால் இது அழைக்கப்படுகிறது. ஒரளவு நன்கு ஆக்ஸிஜனேற்றம் பெற்ற திசுக்களுக்கான இரத்த நாளம் இரத்த ஒட்டம் குறைந்து, குருதிக் குறைவான திசுக்களுக்கு அந்த இரத்தம் செல்வது.

Rocky Mountain spotted fever : மலைப்பாறைப் புள்ளிக் காய்ச்சல் : ஒட்டுண்ணிகளால் பரவும் ரிக்கெட்சியா ரிக்கெட்சியை எனும் கிருமிகளால் உண்டாகும் தொற்று நோயில் மணிக்கட்டுகளிலும் கணுக்காலிலும் சிறு இளஞ்சிவப்புப் புள்ளிகள் தோன்றுவதோடு, பகுதியை வடிக்கும் நிணக் கணுக்கள் வீங்குகின்றன. டெட்ராசைக்ளின் அல்லது குளோ ரோம்ஃபெனிகால் மருந்துகளால் நோய் குணமடைகிறது.

rod : கோல் : 1. ஒரு ஒல்லியான நேர் உருளை. 2. குறைவான வெளிச்சத்தையும் கண்டறிய, கண்ணைத் தகவமைக்கும் ரோடாப்சின் கொண்ட விழித்திரையிலுள்ள ஒளியுணரும் செல்கள்.

rod cel : கண்நுண்கம்பி : கண்ணிலுள்ள நரம்பு உயிரணு. இது மங்கலான ஒளியில் தீவிரமாகச் செயற்படுகிறது. பிரகாசமான ஒளியில் கண்கூம்புகள் (கூம்பு வடிவ நரம்பு முனைகள்) முனைப்பாகச் செயற்பட்டு, கண் நுண்கம்பிகள் செயற்படாதிருக்கும்.

rodent ulcer : கொறி விலங்குப் புண் : முகத்தில் அல்லது கபாலத் தோலில் ஏற்படும் அடி உயிரணுப் பிளவை அல்லது புரையோடும் புண்.

rods and cones : கண் நுண்கம்பிகளும் கூம்புகளும்; திரைக்கூம்பு.

Roentgen : ரான்ட்ஜென் : ஜெர்மன் நாட்டு இயற்பியலாளரான வில்ஹெல்ம் கோன்ராட் ரான்ட் ஜென் பெயரால் அழைக்கப்படும். எக்ஸ் அல்லது காமா கதிரியக்கத்துக்கு ஆட்படும் அளவுக்கான அனைத்துலக அளவீடு.

Roentgenogram : ஊடுகதிர் ஒளிப்படம்.

Roentgenography : ஊடுகதிர் ஒளிப்படக் காட்சியாய்வு.

Roentgen rays : ஊடுகதிர் : ரான்ட்ஜென் கண்டறிந்து நுண்ணுலைக் கதிர்.

Roentgenotherapy : ஊடுகதிர் நோய் நீக்குமுறை.

roller bandage : சுருள்கட்டு : வட்டக்கட்டுக்குப் பயன்படுத்