பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/979

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

scaphoid abdomen

978

Scarlat rash


எலும்பு, மணிக்கட்டு எலும்பு போன்ற படகு வடிவ எலும்பு.

scaphoid abdomen : வடிவ அடி வயிறு.

scapula : தோள் பட்டை; தோள் எலும்பு; பட்டையெலும்பு : தோலிலுள்ள பெரிய முக்கோண வடிவப் பட்டை எலும்பு.

scapulectomy : முதுகுப்பட்டையென்பு நீக்கம் : முதுகுப்பட் டையெலும்பு அறுவை நீக்கம்.

scapuloclavicular : முதுகுப்பட்டை காறையெலும்பு சார் : முது குப்பட்டை எலும்பு மற்றும் காறை எலும்பு தொடர்பான.

scapulohumeral : தோள்பட்டை மேற்கை இணைப்பு சார்ந்த.

scapulopexy : முதுகுப்பட்டை என்பு இடநிலைப்பு : முதுகுப் பட்டையெலும்பை அறுவை முறையில் இட நிலைத்தல்.

scapulo-radial : தோள்பட்டை முன்கை கட்டெலும்பு இணைப்புச் சார்ந்த.

scapulo-ulnar : தோள்பட்டை முன்கை உள்ளெலும்பு இணைப்புச் சார்ந்த.

scar : தழும்பு; வடு : தோலில் ஏற்பட்ட காயம் அல்லது புண் ஆறிய பின்பு உண்டாகும் தழும்பு.

scarification : பல்சிறுகீரல் : ஒரு கூர்முனை கொண்டு தோலில் பல சிறுகீறல் செய்தல்.

scarifier : கீரல் கருவி : பல் சிறுகீரல் செய்யப் பயன்படும் பல கூர்முனை கொண்ட கருவி.

scarlatina : செம்புள்ளி நச்சுக் காய்ச்சல்; செஞ்சிவப்பு : குழந்தைகளுக்கு முக்கியமாக உண்டாகும் காய்ச்சல், முதலில் தொண்டை நோய் ஏற்பட்டு பின்னர் காய்ச்சல் உண்டாகும். பின்னல் தோலில் செம்புள்ளிப் புண்கள் எழும்.

sacrlet fever : செங்காய்ச்சல் : செம்புள்ளி நச்சுக் காய்ச்சல்.

scarlat rash : செம்புள்ளி அம்மை : செம்புள்ளி அம்மை நோய் வகை