புலவர் என்.வி. கலைமணி
137
என்று கூறும் போலந்துக் கவிஞர் ஜிபிக்னியூஹெர்பர்ட் எண்ண ஒவியங்களுக்கேற்ப, மனித வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் ஏராளமாக நடக்கின்றன.
தானுண்ட நீரைத் தலையாலே தரும் மரம்-பூக்கும், காய்க்கும் என்று நம்பினால், அது எப்படியோ பட்ட மரமாகின்றது! புல்வெளியில் தானாக முளைக்கும் அருகம்புல் - சித்த மருத்துவமாவது மட்டுமன்று தெய்வீகப் பலனாகிப் புகழ் பெறுகின்றது.
எனவே, திட்டம் போடுபவன் மனிதன்; அதை நடத்தி வைப்பது இயற்கையின் திரட்சி. அதனால்தான், சாதாரண மனிதானாக மதிக்கப்படுபவன் எல்லாம், காலவேக மாறுதலில் உயர்ந்த மனிதனாக மாறுகிறான். ஏன், வாழ்வாங்கு வாழ்ந்த பின்பு தெய்வத்துள் வைக்கப்படுகிறான்.
இல்லையானால், ஓர் எளிய தோல் பதனிடும் ஜோசப் பாஸ்டியர் என்ற தொழிலாளி, நெப்போலியன் படையில் தளபதி ஆக முடியுமா? ஜோசப் பாஸ்டியரின் மகனான லூயி பாஸ்டியர் என்ற இளம் விஞ்ஞானி, உலக அறிவியல் அறிஞர்கள் இதயத்தில் இடம் பிடிப்பானா? யோசித்துப் பாருங்கள்.
லூயி பாஸ்டியரிடம் இயற்கையாகவே ஓர் அரிய ஆற்றல் அறிவு பொறி ஊடுருவியிருந்தது. ஆனால், பலர் பார்வைக்கு அவன் சாதாரணமாக் காணப்பட்டவன், இயற்கையின் திரட்ச அவனை ஒரு தலைசிறந்த விஞ்ஞானியாக விளக்கியது - வியனுலகத்தின் முன்பு.
படிகங்களைப் பற்றிய ஆராய்ச்சியை லூயி, விரும்பி செய்தார். அதன் பலனை அறிவியல் உலகு முன்பு வைத்தார். அதனால், மூத்த விஞ்ஞானிகள் எல்லாம் தங்கள் ஆய்வகமான இதயத்தின் நட்பு புள்ளியாக ஏற்றனர். அத்தகைய அறிவியல் மேதைகளுள் ஒருவர் ‘பியோட்’ என்பவர்.
‘பியோட்’ இரசாயனப் பேராசிரியர். தலைசிறந்த விஞ்ஞானி என்பது மட்டுமன்று; அவர் ஏறக்குறைய முப்பது ஆண்டு