பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

83


பிடிக்க முடியாது; சிறிது நேரமானதும் காய்ச்சல் தோன்றும்; வெப்பம் அளவு அதிகமாகக் காணப்படும், திடீரென்று காய்ச்சல் மாறி, வியர்வை அதிகமாக வியர்க்கும்; பிறகு காய்ச்சல் நின்று விடும். ஆனால் நோய் தணியாது. இரண்டு மூன்று நாட்களானதும் மீண்டும் காய்ச்சல் விட்டு விட்டுத் தோன்றும்; இந்த அறிகுறிகளுக்குப் பிறகு நோய் கண்டவன் இறந்து விடவும் கூடும். அவ்வளவு சுலபத்தில் மலேரியா நோய் குணமடையாது.

சிங்கோனா: கொய்னா!

மலேரியா எனும் கடும் காய்ச்சல் நோய்க்கு மருந்து கொய்னா என்ற மருந்து, இந்த மருந்து சிங்கோனா என்ற மரப் பட்டைகளிலே இருந்து தயார் செய்கிறார்கள்.

மலேரியா காய்ச்சலுக்கு மருந்து கொய்னா. என்றாலும், அந்த நோய்க்குரிய மூல காரணம் என்ன என்பதைக் கண்டறிய முடியாமலே இருந்தது. ஒரு மர்ம நோய் என்றே மக்கள் அதை நினைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த மர்ம நோயை விவரமாகக் கண்டறிந்தவர்தான் சர். ரொனால்டு ரோஸ் என்ற மருத்துவ விஞ்ஞான மேதை. அந்த வரலாற்றை சற்று விவரமாகவே காண்போம்!.

சர். ரொனால்டு ரோஸ் என்று மருத்துவ விஞ்ஞானி 1857 - ஆம் ஆண்டு மே மாதம் 13 - ஆம் நாள், இந்திய நாட்டிலுள்ள அல்மோரா என்ற ஊரில் பிறந்தார்.

ரோஸ் இளமையும் - கல்வியும் !

ரொனால்டு ரோஸ் தந்தை 1857-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து நடைபெற்ற சிப்பாய் கலகம் எனும் போரில், இந்திய சுதேச மன்னர்களை அடக்குவதற்காக அனுப்பப்ப்ட்ட ஆங்கிலேயர் படை ஒன்றுக்குப் புகழ் பெற்றத் தளபதி பொறுப்புை ஏற்று இந்தியா வந்த ஓர் ஆங்கிலேயர் ஆவார்.

ரோஸ் முன்னோர்களில் சிலர் சிப்பாய்களாகவும், வணிகர் பெருமக்களாகவும் இருந்தவர்கள் மட்டுமல்ல; இந்தியாவின்