பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 மர இனப் பெயர்கள்

வடிக்கப்பட்ட சிறுசிறு பொற்காசுபோல் இருக்கும். நிறத் தாலும் வடிவத்தாலும் இது பொற்காசு போன்றிருத்தலின் பொற்காசு எனப்பட்டது. ஒப்புமை.

முடிமேலழகி = இது கோடகசாலை என்னும் ஒரு வகைப் பூடு. இதன் உச்சி-முடி அழகாயிருக்கும். இதன் ஒவ்வொரு சிம்பின் உச்சியில்தான் பூக்கதிர்கள் இருக்கும்; அதனால், முடிமேல் அழகி எனப்பட்டது. பயன்.

வைத்தி: இது திப்பிலி. வைத்தியநாதன், வைத்திய லிங்கம் என்னும் பெயர்கள் உடையவர்களைச் சுருக்கமாக 'வைத்தி’ என அழைப்பது வழக்கம். இங்கேயும் வைத்தி என்பதை வைத்தியன் - வைத்தியநாதன் என விரித்துக் கொள்ள வேண்டும். திப்பிலி பெரிய வைத்தியன் - வைத்திய நாதன் ஆகும். திப்பிலி வைத்தியன், எல்லா நோய்களையும் போக்கி உடலுக்கு வலிமை தருவானாம்.

LJITL-60 .

தேரன் வெண்பா:

' கட்டி யெதிர்நின்று கடுநோ யெல்லாம் பணியும்; திட்டி வினையகலும், தேகமெத்த - புட்டியாம்; மாமனுக்கு மாமனென மற்றவர்க்கு மற்றவனாம் காமனெனுந் திப்பிலிக்கும் கை”.

எல்லாருக்கும் விருப்பமானது என்னும் பொருளில் திப்பிலி காமன் எனப்பட்டது. மாமனுக்கு மாமனாகவும் மற்றவர்க்கு மற்றவராகவும் இருப்பது என்றால், யார் யாருக்கு எப்படியெப்படி உதவ வேண்டுமோ - அப்படி யெல்லாம் திப்பிலி உதவும் - என்பது கருத்து. பாடலின் இறுதியிலுள்ள 'கை' என்பதைப் பாடலின் முதலில் சேர்த்து, "கடுநோயெல்லாம் திப்பிலிக்குக் கைகட்டி எதிர் நின்று பணியும்' - எனக் கொண்டுகூட்டிப் பொருள்