பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 129

நாயுருவிச் சாம்பல் படி பொன்றா னங்காய்

நந்துமே லிலைச் சாம்பல் படி யொன்றாகும்’என்பது கண்ணப்பர் தந்துள்ள பாடல் பகுதி. இதிலிருந்து முனிவர்க்கும் நாயுருவிக்கும் உள்ள தொடர்பு புலப்பட லாம். நாயுருவி ஒரு வசிய மூலிகை எனச் சொல்லப்படு கிறது. எனவே, நாயுருவி, மாமுதி எனும் பெயர் பெற்றது. சார்பு.

மால் = விஷ்ணுகரந்தை இது. விஷ்ணு=திருமால், எனவே, சொல் விளையாட்டாக இப்பெயர் தரப்பட்டது.

மா வணங்கி - இது குங்குமப்பூ, குப்பை மேனி பூனை வணங்கி எனவும், நெருஞ்சி யானை வணங்கி எனவும் கூறப்படுவதுபோல, இது மாவணங்கி எனப்படு கிறது. மா = வண்டு, விலங்கு. ஒரு வேளை, வண்டோ, விலங்குகளோ இதற்குப் பணிந்து ஒதுங்குவதால் இப்பெயர் பெற்றிருக்கலாமோ? சார்பு.

முக்கண்டகி - கண்டகம் = முள். ஒரு காயில் மூன்று முள்ளையுடைய நெருஞ்சி முக்கண்டகி எனப்பட்டது. வடிவம்.

முட்டை எரு முட்டைப் பீநாறி மரம் சுருக்கமாக

முட்டை எனப்பட்டது. சொற் சுருக்கம்.

முப்புரம் எரித்தோன் = முப்புரம் எரித்தவர் சிவன், எனவே, மிக்க வெப்பம் தரும் முக்கா வேளைப் பூண்டும் மூக்கிரட்டைப் பூண்டும், சொல் விளையாட்டாகச் சிவன் பெயர் பெற்றன.

முனிந்துரை = இது வெந்தயச் செடி. முனிந்துரை = என்றால் சினந்து (கோபித்துப்) பேசுவது. வெந்தயம் என்ற சொல்லிலும் இந்தப் பொருளின் கூறு உள்ளது.