பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 43

கைப்பாகன் : கைப்புஆகன் = கசப்பு உடம்பு உடை யவன். மிகுந்த கசப்புடைய ஒருவகை வேம்பு இப்பெயர்க்கு உரியது. கைப்பு = கசப்பு. பண்பு. (ஆகம் - உடம்பு).

கைப்பான்: பாகலும் கசக்குமாதலின் கைப்பான் எனப்பட்டது. பண்பு.

கையிருப்பு: செங்குவளைக்கு இப்பெயர் தரப்பட் டுள்ளது. குவளை என்பது ஒரு பேரெண். இது பெரிய எண்ணிக்கை கொண்ட செல்வம்-என்னும் பொருள் தரும். கையிருப்பு என்பது கைவசம் உள்ள பெரிய செல்வத்தைக் குறிக்கும். எனவே, செங்குவளைக்குக் கையிருப்பு என்னும் பெயர் பொருந்தும். சொல் விளையாட்டு.

கொக்குக்காலி - கொக்கு மரம் = கொக்கு என்பதற்கு மாமரம் என்னும் பொருள் உண்டு. எனவே, இரு பொருள் அமைந்த சொல் விளையாட்டாக மாமரத்திற்கு இப்பெயர் கள் சூட்டப்பட்டுள்ளன. கொக்கு என்னும் பறவையை இங்கே குறிக்காது. சொல் விளையாட்டு.

கொடிக்கால் கீரை: கொடிக்கால் மரமாகிய அகத்தி யின் கீரை கொடிக்கால் கீரை எனப்பட்டது. சார்பு.

கொடிக்கால் மரம்: வெற்றிலைக் கொடி படர் வதற்குக் காலாக (கொழுகொம்பாக) இருக்கும் அகத்தி மரம் இப்பெயர் பெற்றது. சார்பு.

கொண்டல்மேனி: கொண்டல் = மேகம், மேனி = வடிவம். மேகம் நீல நிறமானது. நீலமேகம் என்ற பெயர் உண்மை காண்க. நீலத்தாமரை, கொண்டல் நிற மேனி யுடன் இருப்பதால் இப்பெயர் பெற்றது. நிறம்-வடிவம்.

கொன்றைசூடி கொன்றைப்பூ சூடுபவர் சிவன். எனவே, சொல் விளையாட்டாகச் சிவகரந்தை என்னும் பூடு கொன்றைசூடி எனப்பட்டது.