பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர் இன்ப் பெயர்கள்

4

5

சாதக சித்தி - சாதன கற்பமூலி: வல்லாரை உடலுக்குச் சாதகம் உண்டாக்கிச் சித்திபெறச் செய்வதாலும், உடலுக்கு நல்ல சாதனப் பொருளாய் இருப்பதாலும் இப்பெயர்கள் பெற்றது. பயன்.

சிணுங்கி : தொண்டால் சிணுங்கியின் சுருக்கப்பெயரே இது. செயல்.

சிவசிவா மரம்: இது சவுக்கு மரம். இதன் பெயர்க் காரணம் சிக்கலாயுள்ளது. சிவனை, திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், சடையன், சடையாண்டி என்றெல்லாம் சொல்வதுண்டு. சவுக்கு மரமும் சடை போன்ற உறுப்பு உடையது; தலைமயிர் போன்ற பகுதி தனித் தனியாகவும் அடர்ந்தும் இருக்கக் காணலாம். மற்றும், சவுக்குக் காய், சிவனுக்கு உரிய உருத்திராக்க மணிபோல் இருப்பதையும் காணலாம். இவ்விருவகை அமைப்பை உடைமையால், சவுக்கு, சிவசிவா மரம் எனப்பட்டது எனலாம். மற்றொரு வகைப் பெயர்க் காரணமும் கூறலாம்:

வெப்பம் தருவதால், குப்பைமேனி, வெற்றிலை முதலியவை, தீத் (நெருப்புத்) தெய்வமாகிய சிவனுடைய பெயர்களைப் பெற்றுள்ளன. அவ்வாறே, சவுக்கும் வெப்பம் உடைய பொருளாதலின், சிவசிவா என்னும் சிவன் பெயரைப் பெற்றதாகக் கூறலாம் அல்லவா? இதனை இன்னும் சிறிது விளக்கலாம்:

விறகுக்குள் தீயும் பாலுக்குள் நெய்யும் மறைந்திருப்பது போல், கடவுள் நம் உடம்புக்குள்ளே மறைந்திருக்கிறார் எனப் பின்வரும் அப்பர் தேவாரப் பாடல் கூறுகிறது.

' விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளான் மாமணிச் சோதியான் '