பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மர இனப் பெயர்கள்

செந்தீவண்ணன். செந்நிற வடிவினனாகிய சிவனுக்கு உரிய இப்பெயரைச் சிவதுளசி பெற்றுள்ளது. சார்பு.

சோகம் நீக்கி: குறிஞ்சிக்கொடி சோர்வைப் போக்குவ தால் இப்பெயர் பெற்றது. பயன்.

தலைக்கணை: கடலைகளுள் பெரியது மொச்சைக் கொட்டைக் கடலை, கடலை உரிக்காத நீண்ட காய் தலைக்கணை போல் இருப்பதால் இப்பெயர் பெற்றது. ஒப்புமை.

தலைச் சூடி: சிவன் தலையில் கொன்றை மலரைச் சூடுவதால், கொன்றை தலைச் சூடி எனப்பட்டது. ஈண்டு, சுந்தரரின் திருமழபாடித் தேவாரப் பதிகப்பாடலில் உள்ள

' மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை

அணிந்தவனே' என்னும் பகுதி நினைவு கூரத்தக்கது. சார்பு.

தலைவலி போக்கி: கிச்சிலிக் கிழங்கும், கத்துரி மஞ்சளும் தலைவலியைப் போக்குவதால் இப்பெயர்

3.

பெற்றன. பயன்.

தளைப்படான்: தளை = விலங்கு, கட்டு. புகை யிலையைப் புகைத்தால், புகை எதனாலும் தளைப் படாமல்-கட்டுப்படாமல் செல்லுமாதலின், புகையிலை

'தளைப்படான்' என்னும் பெயர் பெற்றது. பண்பு.

தனைமயக்குமூலி: கஞ்சா உண்டவர்க்கு மயக்கம்போதை உண்டாவதால், அதற்குத் தனை மயக்கு மூலி எனும் பெயர் ஏற்பட்டது. பயன்.

தாக சாந்தி-தாக சுர வினாசி: இலவங்கம், இலவங்கப் பட்டை, இலவங்கப்பத்திரி, கிராம்பு, கருவாப்பட்டை என்னும் பெயர்களால் குறிப்பிடப்படுவன, சிறு சிறு