பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரைத் தோற்றுவாய்

நூல்பெயர்:

" மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கட் படின் ” (217) என்பது திருக்குறள். உயர்ந்த பண்பாளன் கையில் உள்ள செல்வம், உடல் நோய்கட்கும் பசி நோய்க்கும் மருந்தாகித் தவறாமல் பயன் கொடுக்கும் மரங்கள் போல் பலர்க்கும் பயனளிக்கும் - என்பது கருத்து. ஈண்டு அத்தகைய மரங்கள் சிலவற்றின் - மரங்களின் உறுப்புகள் சிலவற்றின் பெயர்கள் காரண விளக்கங்களுடன் தரப்பெற்றுள்ளன.

தமிழ் நிகண்டுகளில், தாவரம் என்பது, மரப்பெயர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனினும், வடமொழிச் சொல்லாகிய தாவரம் என்பதை, மர இனம், என்னும் பெயரால் தமிழில் குறிப்பிடலாம். எனவேதான், இந் நூலுக்கு மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்’ என்னும் பெயர் தரப்பெற்றுள்ளது. நூல் பொருள் :

இந்த நூலின் தொடக்கத்தில், வசம்பு, கடுக்காய், கோதுமை என்னும் மூன்று மர இனங்களைக் குறிக்கும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அடுத்து, சாம்பசிவம் பிள்ளையின் தமிழ்-ஆங்கில அகர முதலி, சித்த வைத்திய அகராதி, மூலிகை வைத்திய அகராதி, ஜூபிலி தமிழ்ப் பேரகராதி ஆகிய தலைப்புகளின் கீழ் நூற்றுக்கணக்கான மர இனப் பெயர்களும், இவற்றையும் அடுத்து, பல்வேறு அகர முதலி நூல்களில் உள்ள பல மர இனப் பெயர்களும் பெயர்க் காரண விளக்கம் செய்யப்பெற்றுள்ளன. மறு ஆய்வு:

பல மர இனப் பெயர்கள் புதுமையாகவும் கவர்ச்சி யாகவும் சுவையாகவும் மறைபொருள் உடையனவாகவும் சித்தர்களாலும் அறிஞர்களாலும் சூட்டப்பெற்றுள்ளன. இவற்றுள் பலவற்றின் பெயர்க் காரணங்களை, தக்க அகச்