யாத்திரைப் படலம்
115
எழுந்திருப் பதுவு மிலையெனத் தேர்ந்தான்;
அண்டையிற் சென்றான், அழவும் செய்தான்;
'என்ன வேண்டுவது' என்றும் கேட்டான்!
பக்கத் திருந்த பாவிகள், யாங்கள்
இருவரும் ஏங்கி இரங்கி யழுதோம்;
20
கண்ட மக்களும் கதறி யழுதனர்;
புருஷனும் இதனைப் பொறுக்கமாட்டாமல்,
அருகில் நின்ற மருகனை நோக்கி,
"அப்பா! வாடா, அண்டையில் இருடா.
நாச காலர் நாலைந்து பேர்கள்
25
கூடி நம்மைக் கோர்ட்டில் நாடகம்
ஆடும் படியாய் ஆக்கி விட்டனர்.
போகட்டும், போகட்டும், போனது போகட்டும்.
இன்றோ நாளையோ இப்பொழுதோ என்று
எனக்கும் காலம் இறுகி விட்டது[1].
30
இதுநாள் வரையில், யான்என் மனைவி
மக்களுக்கு என்றொரு வஸ்து வாகிலும்
கொடுத்தது மில்லை. குடியிருப்பதற்கு
வீடும் அவர்க்கு வேறிலை, அப்பா!
தங்கத்தை[2] நீயே தாலி கட்டினால்,
35
கவலையின்றிக் கட்டையை விடுவேன்.
அவளும் சமைந்து ஈராண்டுகள் ஆச்சுது;
கண்ணால் உங்கள் கல்யா ணத்தைக்
காண்பனோ? தெய்வ கடாக்ஷம் எப்படியோ!
அத்தைமார் இவர்கள் அல்லும் பகலும்
40
படும்பா டுகள் நீ பார்க்க வில்லையோ?