இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
யாத்திரைப் படலம்
123
‘போலோம் காலம் வந்ததுகாண்
185
பொய்விட் டுடையான் கழல் புகவே’[1]
என்ற பாகம் எடுத்துக் கூறவே,
கணவர்,
ஏங்கி யழுத எங்களை நோக்கினர்,
வாடி யழுத மக்களை நோக்கினர்,
190
கடவுளை எண்ணிக் கையை எடுத்தனர்;
கண்ணை மூடினர், கயிலைபோய்ச் சேர்ந்தனர்.
- ↑ 185-186. யாத்திரைப்பத்தில் இங்குக் குறிக்கப்பட்ட பாடல் அதன் தொடக்கப்பாடல்:
பூவார் சென்னி மன்னன் எம்
புயங்கப் பெருமரன் சிறியோமை
ஓவாது உள்ளம் கலந்துணர்வாய்
உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டு அன்பாய்
ஆட்பட்டீர் வந்து ஒருப்படுமின்
போவோம் காலம் வந்ததுகாண்
பொய்விட் டுடையான் கழல்புகவே.
பூவார்: பூக்கள் நிறைந்த: புயங்கப் பெருமான்: சர்ப்பாபரணங்களை யுடையவன். புயங்கம் பாம்பு: ஓவாது:
ஒழியாது, இடைவிடாது; வெள்ளக்கருணை; மிகுந்த கருணை: ஆலா என்னப்பட்டு; ஆவா என்பது இரக்கத்தை
உணர்த்துகின்றது. காலம்: செல்லுவதற்குரிய காலம்: பொய்
விட்டு; பொய்யான உடலை விட்டு, பொய் நிலையற்ற உடம்பு.