இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
132
மருமக்கள்வழி மான்மியம்
- காயின் ஒரு துண்டா நமக்குப் பிரயோஜனமாவது?
20. பக்கக் கன்றுகள் தாய்வாழையைச் சுற்றி ஒன்றாக நின்றால் நன்றாய்க் குலைத்துப் பயன் தருமா ? அல்லது அவற்றைத் தனித் தனியா யெடுத்து வைத்துப் பாதுகாத்தால் அவ்வாறு பயன் தருமா? நாறு நடுவதில் முதலைக் குறைத்து வைத்து நடவேண்டும் என்பதன் கருத்து என்ன?
21. ஒரு பழைய வீடு; கூரை பிரிந்து கிடக்கிறது; சுவர் மலந்து நிற்கிறது; தளம் அவையான் அறுத்துப் பொந்தும் புடையுமாக இருக்கிறது: தேள், நட்டுவக்காலி, பாம்பு முதலிய விஷ ஜந்துக்கள் குடும்பத்தோடு குடியேறியிருக்கின்றன: இந்த வீட்டைப் பழுது பார்த்து முட்டுத் தட்டுகள் கொடுத்து நாம் வாசம் செய்தல் நல்லதா? அல்லது அடியோடே மாற்றிவிட்டு, காலரீதிக்கு ஏற்றபடி வீடு கட்டி வாசம் செய்தல் நல்லதா?