உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

மருமக்கள்வழி மான்மியம்

தாய சரித்திரங்களை ஊன்றி நோக்கி யுணர்ந்தவர்கள்; நாஞ்சினாட்டு இளைஞர்களுக்கு ஒரு லட்சிய புருஷராக உள்ளவர்கள்; ஆடம்பரம் சிறிதும் இல்லாதவர்கள்; ஆதலால் பிரசங்க மேடைகளிலோ பிரசாரக் கூட்டங்களிலோ அவர்களைக் காணுதல் அரிது. ஆனால் அமைதியோடும் உள்ளுணர்ச்சியோடும் தங்கள் சமுதாய நன்மையின் பொருட்டு இடைவிடாது உழைத்து வந்தார்கள். அவர்கள் உழைப்பில் சுயநலமென்பது சிறிதும் இருப்பதற்கிடமே இல்லை. தூய வாழ்க்கையுடையவர்கள்; சந்தானம் அற்றவர்கள்; எனவே அதுபற்றிய பாசபந்தங்களும் அற்றவர்கள். இல்லறத்தேயிருந்தும் துறவியே.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப்
பண்பும் பயனும் அது
(45)

என்ற வள்ளுவர் குறளுக்கு லட்சியமா யுள்ளவர்கள். எப்பொழுதும் கல்வியிலும் ஆராய்ச்சியிலும் கவித்வ நிவேதனத்திலும் வாழ்ந்து வருபவர்கள். தாம் ஆற்றவேண்டும் அரிய முதற்கடமையாகும் என்று நினைத்தே தமது சமுதாயச் சீர்திருத்தத்திலும் சட்டச் சீர்திருத்தத்திலும் பிள்ளையவர்கள் முனைந்தார்கள்.

இச்சந்தர்ப்பத்தில் நான் திருவனந்தபுரத்தில் பிள்ளையவர்கள் அருகில் வசித்து வந்தேன். ஆதலால் இங்கே எழுதுவனவெல்லாம் எனக்கு நேரில் தெரிந்தவையே. சட்டத்தைச் சீர்திருத்தும் விஷயமாகப் பல நண்பர்களும் பிள்ளையவர்களைக் கண்டு கலந்து கொண்டு சென்றார்கள்.ஸ்ரீ மூலம் பிரஜாஸபையின்