உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

மருமக்கள்வழி மான்மியம்

தோடு பிரசுரமாகிய போதிலும், இத்தோற்றத்தை உறுதிப் படுத்துவதற்கு நூலிற் சிற்சில வரிகளும் சொற்களும் பொடிந்து போயின என்று குறிப்பிட்டிருந்த போதிலும், எழுதியவர்கள் இன்னார் தாமென்றது பலருக்குத் தெரிந்த இரகசியமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு பகுதியும் வெளிவர வெளிவர, தமிழ்மக்கள் அதனை ஆவலாய் வாங்கிப் படித்து வந்தார்கள். இலக்கியச் சுவையிலே ஈடுபட்ட ஸ்ரீ கே. ஜி. சேஷையர் முதலானவர்கள் இந்நூலின் பெருமையைப் பலரும் அறியச் செய்து வந்தார்கள். நாஞ்சினாட்டு வேளாள இளைஞர்கள் இதனை வாசித்து உள்ளங்கொதித்தார்கள்; அவர்களில் முதியோர்கள் இதனை வாசித்த அளவில் இதிலே பொதிந்துகிடக்கும் உண்மையையும் சீர்திருத்தத்தின் அவசியத்தையும் உணர்ந்தார்கள். அந்நாட்டு ஆண்களும் பெண்களும் நூலிலுள்ள நகைச்சுவையில் ஈடுபட்டு உளத்தாற் சிரித்து மகிழ்ந்தார்கள். தமிழிலே ஒரு நூதன இலக்கியம் தோன்றிவிட்டது.

மான்மியம் ஒரு சமுதாயத்தில் சீர்திருத்தத்தை விளைத்தது. அப்படியே தமிழ் நடையிலும் கவிஞர் சமுதாயத்திலும் சீர்திருத்தத்தை இது விளைவிக்க வல்லது என்பதைத் தமிழ் அறிஞர்களுக்குத் தெரி வித்துக்கொள்ளுகிறேன்.

சென்னை
ஸர்வகலாசாலை,
20-11-42.
எஸ். வையாபுரிப் பிள்ளை,
தமிழாராய்ச்சித்துறைத் தலைவர்.