உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

மருமக்கள்வழி மாமின்யம்

அத்தை திருவிளை யாடலை யெல்லாம்
பத்துப் பரஞ்சோ திகளே[1] பாடினும்
முடியா தென்றால், மூதறி வில்லா 45
அடியாள் சொல்லி அறியப் படுமோ?
இரக்கம் சிறிதும் இன்றி, எனக்கிவள்
இடுவாள் வேலைகள் இரவும் பகலும்.
குழந்தைக் குப்பால் கொடுக்க வொட்டாள்;
கும்பி யாரக் குடிக்க வொட்டாள்; 50
உண்ண வொட்டாள் உறங்க வொட்டாள்;
உடலைக் கீழே சரிக்க[2] வொட்டாள்;
அருமை மதினி அடிக்கடி அடிக்கடி
சடைவா றுதற்குத்[3] தாய்வீ டடைவாள்;
மக்களும் பின்னால் வருவர்; புருஷன் 55
இரண்டொரு நாள்கழித் தெட்டிப் பார்ப்பான்
வந்தால் போகும் வரையிலும் என்னை
அம்மியில் வைத்துச் சம்மந்தி யாக[4]
அரைத்து விடுவாள். ஐயம் அதற்கிலை.
என்னிரு மக்களும் இவருக் கேவல் 60
செய்து செய்து துரும்பாய்த் தேய்ந்தார்.


  1. 44. பரஞ்சோதி-திருவிளையாடற் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர்.
  2. 52. சரிக்க - சாய்க்க; படுக்க.
  3. 54. சடைவு ஆறுதற்கு - இளைப்பு நீங்குதற்கு.
  4. 58. சம்மந்தி (சம்பந்தி): துவையல் வகை; ஒரு பெண்ணின் நாயகனுடைய தங்கை அவளை விட வயதில் சிறியவளாயிருந்தால் அவளுக்குச் சம்பந்தி முறையாவாள்; அவளுடைய தம்பி மனைவியும் அவளுக்குச் சம்பந்தியாவாள்.