உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்த்துப் படலம்

81

மந்தா ரம்புதூர்[1] மதுவிளை நாடான் 40
கிட்டின முத்துவைக் கேட்டால் தெரியும்.
நான்சொன் னால் நீ நம்புவை யோடா?
பள்ளியில் உன்மகன் படித்துப் பெரிய
பரீக்ஷையும் கொடுத்துப் பட்டமும் பெற்றுஒரு
மாதவ ராயராய்[2] வரட்டும் அப்பா! 45
நாடும் நகரும் நடுங்கட்டும், அப்பா!
அழகு! அழகு! அதிசயம்! அதிசயம்!
பெற்ற புத்திரன் பெரும்பிழை செய்யினும்
சிறுவன் செய்த சிறுபிழை என்பாய்,
சினந்திட மாட்டாய், சிரித்து விடுவாய். 50
ஏசினும் பேசினும் எட்டி யடிப்பினும் [வாய்.
மறுத்துரை செய்யாய், பொறுத்துக் கொள்
'மக்கள்மெய் தீண்டலுடற் கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்’கெனச்[3]
                                     [சொல்லும்
உண்மைக் குறளின் உட்பொருள் அறிந்து 55


  1. 40. மந்தாரம்புதூர் - குமரிக்குப் போகும் வழியருகிலுள்ள ஓர் ஊர்.
  2. 45. மாதவராயர் : இவர் கி.பி. 1858 முதல் 1872 வரையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பல சீர்திருத்தங்களைச் செய்தவர் இவரே. திருட்டு முதலிய தீமைகளை அறவே ஒழிக்கத்தக்க ஏற்பாடு செய்தார். இலவசக் கல்வி நிலையங்கள் பல, இவர் காலத்தில் ஏற்பட்டன. திருவனந்தபுரத்திலுள்ள பெரிய அரசாங்கக் காரியாலயமாகிய ஹுஸுர்க் கச்சேரி கட்டியவரும் இவரே. இவரது உருவச்சிலை இவர் கட்டிய கச்சேரி மாளிகையின் எதிர்ப்புறத்துச் சாலையிலே மாளிகையை நோக்கி நிறுவப் பெற்றுள்ளது.
  3. 53-54. திருக்குறள் 'புதல்வரைப் பெறுதல்' என்ற
    அதிகாரத்தில் வரும் ஐந்தரம் பாடல்.

ம, மா. -6