உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

மருமக்கள்வழி மான்மியம்

மாசெலாம் அகற்றி வையகம் தொழுதன்
அடியில் இடுஞ்செருப் பாணிகள் ஆக்கவும்.
அவர்,
கொடுங்கோல் எல்லாம் குதிரைப் பாகர் 100
தாங்குதற் குரிய சவுக்குகள் ஆக்கவும்,
ஈட்டி வாள் இவை யாவையும் முறித்துப்
பண்பட நிலம் உழு படைகள் ஆக்கவும்
கொடிகள் கொற்றக் குடைகள் இவற்றைச்
சிறுசிறு துண்டாய்க் கீறிச் சிறுமியர் 105
பாவைக்கு அணிபா வாடைகள் ஆக்கவும்,
நாடும் நகரும் நாசம் செய்யும்
பென்னம் பெரிய பீரங் கிகளை
இந்திய நாட்டில் இழுத்துக் கொணர்ந்து
செந்நெல் கோதுமை தீங்கரும்பு என்று 110
பன்னப் படுபல பயிர்களும் ஓங்குநம்
நிலங்களில் என்றும் நீர்வளம் பெருகக்
கங்கை யமுனை காவிரி முதலிய
வற்றிலா நதிகளில் மடைகள் ஆக்கவும்.
கங்கணம் கட்டியெம் காவலர் காவலன் 115
ஐந்தாம் ஜ்யார்ஜாம் அமரா பரணன்[1]
பூதலம் மீதலம் பாதலம் நடுங்க
ஏம கால தூதரும் இளைக்கக்


  1. 116.ஐந்தாம் ஜ்யார்ஜ் செய்த கடும்போர் : இவர்
    இங்கிலாந்து தேசத்து மன்னர். இந்தியாவில் பிரிட்டிஷ்,
    அரசாங்கம் இருந்தபோது, இந்தியச் சக்கரவர்த்தியாக விளங்கினார். இவர் காலத்தில்தான் முதல் உலக மகாயுத்தம்
    (1914-1919) நடைபெற்றது. இதுதான் இவர் செய்த கடும்
    போர்.