பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 மர இனப் ஈந்ததற்கு இன்னொரு காரணமும் கூறலாம்; அது பின்னர் உரிய இடத்தில் விளக்கப்படும். இப்பெயர் சா.சி.பி. அகர முதலியில் தரப்பட்டுள்ள அ. 2. வகைகள் : கரிசலாங்கண்ணி தன்னிடம் பூக்கும் பூக்களின் நிறத்தின் அடிப்படையில் நால்வகைப்படும். அவை:- கருநீலம், சிவப்பு, மஞ்சள், வெள்னை என்பன. இவற்றுள் வெள்ளை மிகுதி யாகக் கிடைக்கும்; மஞ்சள் ஒரளவு கிடைக்கும்; கருநீலமும் சிவப்பும் அரிதாகக் கிடைக்கும். சிவப்பு கிடைப்பது அரிதென்றே கூறலாம். மருத்துவ மூலிகைகள் தொடர்பான நூல்களில் கருநீலமும் மஞ்சளுமே பெரிதும் பேசப்பட் டுள்ளன. கருநீலத்துக்குக் கரிசலாங்கண்ணி என்ற பெயரும் மஞ்சளுக்குப் பொற்றலைக் கையாந்தகரை என்ற பெயரும் தரப்பட்டுள்ளன. 2.1. இருவேறு கருத்துகள்: முருகேச முதலியாரின் பொருட் பண்பு (பயிர் வகுப்பு) நாவில், கரிசலாங்கண்ணிை என்ற தலைப்பிலேயே பொற்ற லைக் கையாந்தகரையும் இனைத்துக் கூறப்பட்டுள்ளது. பல அகர முதவிகளிலும் இரண்டும் இணைத்துப் பிணைத்தே அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அற்புத சிந்தாமணி என்னும் பதார்த்த குண சிந்தாமணி என்னும் நூலிலும், கண்ணுசாமி பிள்ளையின் சித்த வைத்தியப் பதார்த்த கு ைவிளக்கம் என்னும் நூலிலும், பைரவரின் ஆனந்த கத்தம் என்னும் நூலிலும் இரண்டும் தனித்தனித் தலைப்பிலேயே கூறப்பட்டுள்ளன. 3. பொதுச் செய்திகள் 3-1 . இடத்தால் பெற்ற பெயர் 3- 1 - 1. கரிசலாங் கண்ணி: கவிச லாங் கண்ணி என்னும் பெயர் நான்கு வகைக்குக - - -- 令 - 哆 - பொருந்தலாம். அதாவது, கரிசல் மண்ணில் விளை: பெயர்வைப்புக் கலை 155 முலி என்பது இதற்குப் பொருள். கரிசல் மண் என்பது, Ꭷh1©YᎢ LfL fᎢ 6Ꮱr பகுதியாகும். இம்மண்ணில், இரண்டாயிரம் ஆண்டு காலம் வரைக்கும், எரு - உரம் இட.ாமலேயே, நீர் பாய்ச்சாமலேயே பயிர் பச்சைகள் விளையக் கூடும் எனப் பண்டைக் காலந்தொட்டு மண்ணி யல் ஆய்வாளரால் (Geologists) கூறப்படுகிறது. இது மிகையாகத் தோன்றினும் கரிசல் மண் நீரை நீண்ட நாளைக்குப் பயன்படும்படி தேக்கி வைத்துக் கொள்ளும் இயல்புடையது என்பதை மறுக்க முடியாது. இதனால் இது பருத்திப் பயிருக்குச் சாலச் சிறந்தது. இத்தகைய வளமான, 1ளரும் ஆதலின், கரிசலாங் கருநிற மண் இடத்தில் முலிகை தன்றாக கண்ணி எனப் பெயர் பெற்றதாகக் கூறலாம். இதற்கு இன்னொரு பெயர்க் காரணம் பின்னர்க் கூறப்படும். 3-2. பயனால் பெற்ற பெயர்கள்: 3-2-1 , கண்ணி - கண்ணன்: கண்ணுக்கு நல்லது செய்யும் - இனிமை செய்யும் மூலிகை என்னும் பொருளில், கண்ணி (தை.வ.சு.) கண்ணுக்கு இனியாள், கண்ணன், கண்னன் மூவி என்னும் பெயர்கள் (சா.சி.பி.) இதற்குத் தரப்பட்டுள்ளன. இவை பயனால் வந்தவை. 3-2-2. திரையில்லான் - இம் மூலிகையை உட்கொள்பவருக்கு நரை திரை வாரா எனப்படுகிறது. நரை=முடி (மயிர்) வெளுத்தல்: திரை = தோல் சுருங்குதல். ஆனந்த கந்தம் என்னும் நூலில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்நூலின் பொருள் அடக்கத்தில் கரிசலாங்கண்ணி என்றும், நூலுக்குள்ளே கருசலாங்கண்ணி என்றும் பெயர் அமைக்கப்பட்டுள்ளது. நூற்பகுதி வருமாறு: பதினைந்தாவது உல்லாசம்: