பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 மர இனப் கருநிறத்தின் அடிப்படையிலேயே, கரிசலாங் கண்ணிை என்பது, கரசனாங்கண்ணி (பொ.ப. நூல்) எனத் திரிந்தும், கரிசலை (மவை), கரி சாலை, - கரிய சாலை - கருங் கையான், - கருங் களிப்பான் - கருங்கடாகச் செடி-கருப்புக் கரிசலாங் கண்ணி - மைக் (கறுப்புக்) கரிப்பான் செடி - கருமுருகி மூலி (சி.வை.அ.), கரிய கரிப்பான் - கரியலாங் கண்ணி - கருங்கண்ணி - கருங் கரப்பன் - கருங்கரி சாலை, கரிச்சால் (சா.சி.பி.) என்றெல்லாம் சுருங்கியும் மாறுபட்டும் கூறப்பட்டுள்ளது. 4-1-2. கருஞ்சாறு: இந்த வகையின் பூ கருநிறமானது என்பது ஒருபுறம் இருக்க, இதன் இலையைப் பிழிந்தால் சாறு ஒரளவு கறுப்பாய் இருக்கும் என்பதும் கவனிக்கத் தக்கது. இவற்றை நிறத்தாற் பெற்ற பெயர்களாகக் கொள்ளலாம். 4-2 பொற்றலைக் கையாங் தகரை அ) பொன்தலை: இந்த இனம், மஞ்சள் நிறப் பூக்களை உடைமையின் பொற்றலை எனப்படுகிறது. பொன் + தலை=பொற்றலை யாகும். மஞ்சள் பூ பொன்னிறமாக இருக்குமன்றோ?. அடுத்து, தகரை என்பது ஒரு பூடு வகையைக் குறிக்கும் பொதுச் சொல் ஆகும். தகரை என்னும் பெயரில் சில செடி வகைகள் உள்ளன. ஊசித் தகரை, கருந் தகரை, காட்டுத் தகரை, வெண் தகரை, பேயாவாரைத் தகரை, பொன்னா விரைத் தகரை என்பன தகரைக் குடும்பத்தனவாம். இவற்றுள் ஒரு வகையின் இலையைச் சிலர் சமைத்து உண்பதுண்டு. அளவு மீறின் கழியும். ஒருவகைத் தகரையின் காயைச் சிறார்கள் பறித்து நெற்றியில் அடித்துக் பெயர்வைப்புக் கலை 163 கொள்வார்கள்: அந்தக்காய் பிளந்து சிறு வெடியொலி செய்யும். ஒருவகைத் தகரையின் விதையைக் காப்பிக் கொட்டைக்குப் பதிலாகச் சிலர் பயன்படுத்துவதுண்டு. இது கலப்படமாகும். ஆ) உயர் தகஏை: ஆனால், பொற்றலைக் கையாந் தகரை, மேற் கூறியுள்ள தகரைகளிலும் வேறானது: உயர்ந்தது. கரிசலாங் கண்ணி இனத்துள் இஃதே உணவுக்கு மிகவும் ஏற்றது. வெள்ளை வகையை இதற்கு அடுத்ததாகச் சொல்லலாம். இ) கையாங் தகரை, கையாந் தகரை என இதற்குக் 'கை' என்னும் பெயர் :ை ; ; ; ம்: க் தெளிவான காரணம் தெரியவில்லை. چیحی نیمه ه به = تا خجسته چیحی چ حمتی عبیبیہ حتمغہ حستعآپ کیھتی تحتی கண்ணுக்கு நல்லது செய்தலின் கண்ணி எனப்பட்டதுபோல் கைக்கு வன்மையூட்டுவதால் கையாந் தகரை எனப்பெயர் வந்திருக்கலாம் என ஒருவர் கூறினார். இது பொருத்தமாகத் தெரியவில்லை. இதன் இலை, ஈட்டிபோல் மூன்று அங்குல நீளம் வரையுங்கூட நீட்டிக்கொண்டிருக்கும். கைபோல் நீட்டிக் கொண்டிருப்பதால் கையாந் தகரை என்ற பெயர் வந்திருக் கலாம். இதற்குக் கைவீசி இலை என்னும் ஒரு பெயர் சா.சி.பி. அகர முதலியில் தரப்பட்டிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கற்பாற்று. -> 'கை' என்னும் சொல்லுக்கு ஒப்பனை" (Dressing, Decoration) என்ற பொருள், பிங்கல நிகண்டில் تطبخة பட்டுள்ளது. தலைப்பில் பொன்னிறப் பூ இருப்பது ஒப்பனையாகத் (அலங்காரமாகத் தோன்றுவதாலும் 'கை' என்னும் பெயர் சேர்க்கப்பட்டிருக்கலாம். அல்லது -