6 அவரின் மூன்று நாள் பயணத்தில் அவர் தங்கிய இடத்திற்கே வந்து பல்வேறு வி.ஐ.பி.க்களும், உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் மாலையும், சால்வையும் அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதையெல்லாம் அவரே வைத்துக் கொள்ளவில்லை. பரம்பிக்குளம், சோலையாறு, ஆளியாறு, டாப்ஸ்லிப் என்று இவர் போகும் இடங்களிலெல்லாம் எதிர்ப்படும் வாட்ச்மேன், ஃபாரஸ்ட் கார்டுகளுக்கெல்லாம் சால்வையைப் போர்த்தி கூடவே தன் பாக்கெட்டிலிருந்து ஒவ்வொருவருக்கும் ஒரு நூறு ரூபாய் நோட்டையும் பரிசாகக் கொடுத்து அசத்தினார். அவர் இரண்டு நாள் கழித்து டாப்ஸ்லிப் பயணமெல்லாம் முடித்து விட்டு கோவை பயணியர் விடுதியில் தங்கியிருந்த போது நான் எடுத்த அவரின் புகைப்படங்களை யெல்லாம் ஆல்பமாக்கிக் கொண்டு போய் போய் அவரிடம் கொடுத்தேன். அப்போது ஏராளமான கட்சிக்காரர்கள், வி.ஐ.பிக்கள் வந்து சந்தித்து அவருடன் சேர்ந்த மாதிரி புகைப்படமும் எடுத்துக் கொண்டு சென்றபடி இருந்தார்கள். அவரும் உட்கார்ந்தபடியேதான் அவர்களுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசை. என்னுடைய கேமராவை அங்கிருந்த உள்ளூர் போட்டோகிராபர் ஒருவரிடம் கொடுத்து விட்டு ஐயாவை அணுகினேன். "ஐயா, நானும் உங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்கறேனே!" என்று பவ்யமாகக்
பக்கம்:மறக்க முடியுமா.pdf/13
Appearance