9 இருக்கிறது. பெட்டியோ திருவாரூர் வீட்டுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்டு விட்டது. வீட்டுக் குலதெய்வமாகக் கருதப்படும் பெரியம்மா குஞ்சம்மாள் பற்றியும் - அவருக்கு அணிவிக்கப்பட்ட மலர்கள் - நிறைந்த செல்லப் பெட்டியைப் பற்றியும் - இவ்வளவு விரிவாகக் குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. மாறனுக்கு இரண்டு அல்லது மூன்று வயது இருக்கும். என் கையைப் பற்றிக் கொண்டு தத்தி நடக்கும் பருவம். முதல் பெயர் தியாகராஜசுந்தரம் - பிறகு நெடுமாறன் என்று மாற்றப்பட்டு மாறன் என்று ஆகி; இறுதியில் முரசொலி மாறன் எனப் புகழ் பெற்றார். - குழந்தை மாறனை வீட்டில் விட்டு விட்டு, வழக்கம் போல் முத்தமாரி பொழிந்து விட்டு - ஐந்தாறு வீடுகள் தள்ளியிருக்கும் நான் படிக்கும் பள்ளிக்கூடத்துக்குப் போயிருந்தேன். பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது அதிர்ச்சியான செய்தியொன்று என் காதில் விழுந்தது. மாறனுக்கு உடம்பு சரியில்லை, ரொம்ப ஆபத்து, பிள்ளை பிழைப்பது கஷ்டம், இத்தனை செய்திகளும் சவுக்கடிகளாக இடிகளாக என்னைத் தாக்கிட ஓடினேன் வீடு நோக்கி. - வீட்டு வாயிற்புறத்தில், கூடத்தில் உறவினர்கள் என்ன ஆச்சு என்று அலறியவாறு அம்மாவைப் பார்த்தேன். அம்மா என்னைக் பரபரப்புடன் காணப்பட்டனர். கட்டிப் பிடித்துக் கொண்டு கதறினார்கள். ஓடிய வேகத்தில்
பக்கம்:மறக்க முடியுமா.pdf/16
Appearance