24 அரசியல் அரங்கில் மாறன் என்ற கோணத்தில் அவரைப் படம் பிடித்துக் காட்டாமல் வாழ்க்கையில் நாங்கள் சந்தித்த சம்பவங்களை மட்டுமே விவரிப்பது என் தலையாய நோக்கமாகி அவைகளை நினைவு கூர்ந்திடும் கடமையைச் செய்கிறேன். - “ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?" என்ற நூலுக்கு அணிந்துரை எழுதிய அண்ணா அவர்கள் “மாறன் என்றால் சாமான்யமா என் தம்பியல்லவோ! அதனால் தான் “ஏடு" கனிவும், தெளிவும், சுவையும், பயனும் குலுங்கும் நிலையில் இருக்கிறது. பூகோளம், சரிதம், புள்ளி விபரம் எனும் மூன்று துறைகளிலும் அப்பழுக்கற்ற ஆதாரங்களை எடுத்துக் காட்டியிருப்பதில் விளக்கமும் எழிலும் நிரம்ப இருக்கிறது” என்று மனந்திறந்து பாராட்டியிருக்கிறார். திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு புத்தக வடிவம் தரக் கூடியவர் - எழுத்து உருவில் மக்களிடம் கொண்டு செல்லக் கூடியவர் என்று மட்டுமே அறிமுகமாகியிருந்த மாறனை பொது மக்களிடமும் பழகிட வேண்டும் எனும் ஆவல் என்னைப் போலவே திருச்சி அன்பில் தர்மலிங்கம் போன்றவர்களுக்கும், மன்னை நாராயணசாமி போன்றவர் களுக்கும் உண்டு. அதையொட்டி அன்பில் தர்மலிங்கம் முன்னின்று நடத்திய திருக்காட்டுப்பள்ளி திருமணம் ஒன்றுக்கு என்னைத் தலைமையேற்றிட அழைத்ததுடன் மாறனையும் வற்புறுத்தி அழைத்தார்கள். அன்பில், மன்னை போன்ற இயக்க முன்னோடிகளிடம் தனி மரியாதை கொண்டிருந்த
பக்கம்:மறக்க முடியுமா.pdf/34
Appearance