உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறக்க முடியுமா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 அடுத்தநாளே என் மகன் மு.க. ஸ்டாலினைக் கைது செய்து கொண்டு போன போலீசார் அதைத் தொடர்ந்து முரசொலி மாறன் எங்கே என்று தேடினார்கள். அவருடைய நெருங்கிய நண்பர் கமலநாதன் எம்.பி., யுடன் டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த மாறன் எம்.பி.யும் வழியிலே ஐதராபாத்திலோ, பெங்களூரிலோ கு விமான நிலையத்தில் இறங்கி, உடனடியாக சென்னைக்கு வராமல் தலைமறைவாகி விட்டார்கள். என்ன ஆனார்கள்? எங்கே போனார்கள்? என்ற கவலையில் எங்கள் வீட்டார் கலங்கித் தவிக்கிறார்கள். அப்பொழுதுதான் பரோடா வழக்கு எனும் பயங்கர வழக்கு தொடரப்பட்டு ஜார்ஜ் பெர்னாண்டஸ் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். அவரைப் போலவே ஒரு தீவிரப் போராட்டத்தில் குதிக்க இருப்பதாகவும், அதற்கு என்னுடைய வாழ்த்து வேண்டுமென்றும் மாறன் எனக்கு ஒருவர் மூலம் கொடுத் தனுப்பிய ரகசியக் கடிதம் எனக்கு வந்து சேர்ந்தது. கடிதம் கொண்டு வந்த ஆள் வாயிலாக மாறன் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்ட நான்; உடனே அவர் ஈடுபட விரும்புகிற அந்தத் தீவிரப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்திட நினைத்து; அவரை உடனே வந்து என்னைப் பார்க்குமாறு பணித்தேன். காவல்துறையினர் கண்களில் பட்டு விடாமல், அவரும் கமலநாதனும் கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் வாகனங்களை மாற்றிக் கொண்டு - மாறுவேடத்தில் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். மிசா நெருக்கடி