33 டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்தது போல அந்த நள்ளிரவு நிகழ்ச்சி அமைந்தது என்றே சொல்லலாம். 2001ஆம் ஆண்டு மே திங்கள் ம வரையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நான், அப்போது தான் தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்த காரணத்தால் சட்டப் பேரவையில் எதிர்வரிசையில் இடம் பெறுகிறேன். அப்போது மாறன் மத்திய அமைச்சர். சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்த மாறன்; சென்னையில் ஜூன் 30ந்தேதி இரவு நடைபெற்ற அந்த நிகழ்ச்சியை, அவரே ஜூலை 2ந்தேதி பிரதமர் வாஜ்பய் அவர்களுக்குத் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அது வருமாறு
- -
"ஜுன் 30ந்தேதி நள்ளிரவு 1.45 மணிக்கு போலீசார் தி.மு.க. தலைவர் கலைஞர் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு அவரது படுக்கை அறைக்குள் திபுதிபு என்று புகுந்து உள்ளனர். உடனே கலைஞரிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் அவரது வீட்டுக்கு விரைந்தேன். அங்கு எனது தலைவர் கலைஞர் இரவு உடையில் (லுங்கி) இருந்தார். அவரைச் சுற்றி ஏறத்தாழ 20 போலீஸ் அதிகாரிகள் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது யாரோ ஒருவர் கருணாநிதியை யை கைது செய்துள்ளோம் என்று கத்தினார். உடனே நான் சம்மன் இருக்கிறதா, என்ன குற்றச்சாட்டு என்று கேட்டேன். அதற்கு ஒரு ஐ.பி.எஸ். போலீஸ் அதிகாரி இந்தக் கேள்வியைக் கேட்க நீங்கள் யார் என்று கேட்டார். இன்னொரு போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரி மோசமான வார்த்தைகளால்,