பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 -

--- மறவா சிமை

கொடுத்துவிடுகிறேன்" "மகிழ்ச்சி ஐயா, இன்றே யாழ்ப்பாணத்திற்கு தெரியப்படுத்திவிடுகிறேன். நீங்கள் சரியாக ஒரு வாரம் கழித்து இங்கு சந்திக்கவும்."

"நன்றி ஐயா! நான் போய் வருகிறேன்." மயிலப்பனும் வீரர்களும் புறப்பட்டனர்.

வேம்பாறிலிருந்து திரும்பும் வழியில் சேர்வைக்காரரும், குழுவினரும, இளைப்பாறிச் செல்வதற்காக கன்னிராஜபுரம் சென்றனர். அந்த ஊரின் மிராசுதாரர் அப்துல்கனி சேர்வைக்காரரையும், வீரர்களையும் உபசரித்து மதிய உணவிற்கு ஏற்பாடு செய்தார். இந்த மிராசுதாரர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், சேதுபதி மன்னரால் அந்தப் பகுதியின் காவல் பணிக்கு நியமிக்கப்பட்டவர். அப்பொழுதைய சேதுபதி மன்னர் அந்தப் பகுதியில் மூவாயிரம் குறுக்கம் நிலத்தையும் அப்துல்கனி சேர்வைக்காரரது தகப்பனாருக்கு இனாமாக வழங்கியிருந்தார். அந்தப் பகுதியே அப்துல்கனி சேர்வைக்காரரது பெயரால் கனிராஜபுரம் என்ற பெயரால் வழக்குப் பெற்று, பின்னர் கன்னிராஜபுரம் என மாறிற்து.

சிறந்த சேதுபதி மன்னரது இராஜவிசுவாசியான மிராசுதார் சித்திரங்குடி சேர்வைக்காரரிடம், பரங்கியரை அழிப்பதற்கான ஆயத்தங்கள் பற்றிய விவரங்களை ஆர்வத்துடன் கேட்டு அறிந்துகொண்டார். அங்கு மதிய உணவை முடித்துக்கொண்ட சித்திரங்குடி சேர்வைக்காரரும், அவரது வீரர்களும் சிறிது நேரம் இளைப்பாறிய பின்னர் வெயில் தாழ்ந்த பிறகு விடைபெற்றுக் கொண்டு பேரையூருக்குப் புறப்பட்டனர்.

அன்று மாலை மயிலப்பன், சேர்வைக்காரரும் வீரர்களும் பேரையூர் கண்மாய்க் கரையில் உள்ள மடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர். ஏற்கனவே அறிவித்திருந்தபடி அங்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த நாட்டுத்தலைவர்கள் அனைவரும் கூடியிருந்தனர். மயிலப்பன்