பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்= —-***

உங்களது வீரர்களும் இந்தக் கோட்டைக்குத் தெற்கே மறவர் மங்கலத்தில் நிலைகொள்ள வேண்டும். இன்னும் ஒருவாரகால அவகாசத்தில் மீனங்குடி முத்துக்கருப்பத் தேவரையும் அவரது அணியுடன் கிழக்கே புலியடிதர்மம் அருகே நிலைகொள்ளுமாறு செய்து இருக்கிறேன். சண்டையின்பொழுது, உங்களது உதவி தேவைப்படுமானால், காளையார்கோவில் கோபுர உச்சியில் இளஞ்சிவப்புக் கொடியை ஏற்றுவோம். அப்பொழுது நீங்கள் விரைந்து வந்து எங்களுடன் போரில் பங்கு கொள்ள வேண்டும்" சின்னமருது சேர்வைக்காரர் திட்டத்தைத் தெரிவித்தார்.

"மிகுந்த மகிழ்ச்சி, இன்று மாலையிலேயே எங்களது சீமைக்குத் திரும்ப உரிய ஏற்பாடு செய்கிறேன். இறுதி வெற்றி நமக்குத்தான். ஆக்ரோஷத்துடன் மயிலப்பன் சேர்வைக்காரர் கனத்த குரலில் சொன்னார். "நன்றி" என்று கூறிய சின்னமருது சேர்வைக்காரரது உதடுகளில் புன்னகை மலர்ந்து பளிச்சிட்டது.

அப்பொழுது அங்கு பெரிய மருது சேர்வைக்காரரும், மீனங்கு முத்துக்கருப்பத் தேவரும் வந்து சேர்ந்தனர். "என்ன சேர்வைக்காரரே, நீங்கள் எப்பொழுது இங்கு வந்தீர்கள். நலம்தானே!

இருவரும் மயிலப்பன் சேர்வைக்காரரை நலம் விசாரித்தனர். அப்பொழுது உச்சி காலப்பூஜைக்கான மணியோசை ஒலித்ததுடன் கோயில் நாதசுர இசையும் அடுத்தடுத்து ஒலித்தது.

"வாருங்கள் நாம் சன்னதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, சாப்பிடச் செல்வோம்" என சின்னமருது சேர்வைக்காரர் சொன்னதும், நால்வரும் சன்னதி நோக்கிச் சென்றனர்.

அந்த நான்கு பேர்களின் முகத்தில் நடைபெறவிருக்கும் போர் பற்றிய கவலையின் கோடுகள் படர்ந்து இருந்தன.