பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

மாவீரன் மயிலப்பன்

தொடங்கினர்.

அப்பொழுது வடக்கேயிருந்து போர்வீரன் ஒருவன் குதிரையில் வேகமாக வந்து மயிலப்பன் சேர்வைக்காரர் நின்று கொண்டிருந்த பகுதியில் குதிரையை நிறுத்தி,

"பரங்கிப் படைகளுடன் போர் தொடங்கி விட்டது. கொல்லங்குடி, முத்துார் வழியாக இரண்டு அணிகளும் அரண்மனை சிறுவயல் வழியாக இன்னொரு அணியுமாக மூன்று பிரிவுகளாக எதிரிகள் காளையார்கோவில் கோட்டையைத் தாக்கத் தொடங்கி விட்டனர். நீங்கள் அனைவரும் ஆயத்தமாக இருக்குமாறு சேர்வைக்காரர்கள் தெரிவிக்கச் சொன்னார்கள், என்று குதிரையில் இருந்தவாறு சொல்லிய குதிரைவீரன் வேகமாகக் குதிரையைத் திருப்பிக்கொண்டு காளையார்கோவிலுக்கு விரைந்து சென்றான்.

அணித்தலைவர்களான சில சேர்வைக்காரர்களை மயிலப்பன் அழைத்தார். அவரும் மயிலப்பன் சேர்வைக்காரரது அடுத்த கட்டளையை எதிர்பார்த்து நின்றனர்.

"நமது எதிரிகளை அழித்து ஒழித்து நமது மறவர் சீமையின் மானத்தைக் காக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. தலைமுறை தலைமுறையாக நமது மக்கள் நமது பூமித் தாய்க்குச் செலுத்திவந்த, இரத்த காணிக்கை, உயிர்த்தியாகம் ஆகிய நேர்த்திக் கடன்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் செலுத்துவதற்கு ஆயத்தமாக இருங்கள்.

"நாம் இந்த இறுதிப்போரில் வெற்றி பெற்றால் நாம் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும், நமது புனிதக்கடமை நிறைவேறும். நமது பூமி மானமும், வீரமும் விஞ்சிய மறவர் சீமையாக விளங்கும். இன்னும் சிறிது நேரத்தில் நம்மை அழைக்கும் வகையில் காளையார்கோவில் கோபுரத்தில் சிவப்புக்கொடி ஏற்றப்படும். அதனைக்கண்டவுடன் நாம் அங்கே விரைந்து சென்று போரில் கலந்து