பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- # = 135 மாவீரன் மயிலப்பன் –

சுவர்க்கமாகவல்லவா மாறிவிடும்.

அன்று வைகறைப் பொழுதில், பரங்கிகளது முன்னேற்றத்தைத் தடைப்படுத்துவது போல காளையார் கோவில் மேற்கு மதிலில் ஏற்றப்பட்டிருந்த பீரங்கிக் குண்டுகள் அக்கினி மழையாகப் பொழிந்து கொண்டிருந்தன. காளையார்கோவில் கோட்டை வாசலில் இருந்து கோட்டையின் மேற்குச் சுவருக்கும் அப்பால்வரை குழுமி அணி வகுத்து நின்ற கிளர்ச்சிக்காரர்களது படை ஆவேசத்தினால் துடித்துக் கொண்டிருந்தது.

கோட்டை வாசலுக்கு வரஇயலாதவாறு பரங்கிகளது இரு அணிகளையும் மடக்கி அழித்துவிட வேண்டும் என்பது அவர்களது திட்டம். ஆனால், பரங்கியரது மூன்றாவது அணி ஒன்று வடக்கே அரண்மனை சிறுவயல் பாதையில் கர்னல் ஷெப்பர்டு தலைமையில் எதிர்பாராதவிதமாகக் கோட்டைவாசலை நோக்கி முன்னேறி வந்து (கிழக்கில்) கொண்டிருந்தது. கிளர்ச்சிப் படையினர் பரங்கியரது கிடுக்கித் தாக்குதலுக்கு உட்படும் வகையில், சிறிது நேரம் கிளர்ச்சிக்காரரது அணிகளில் குழப்பம். முடிவில் மேற்கிலும் கிழக்கிலுமாகப் பரங்கியரை எதிர்த்துப் போரிடுவது என முடிவு செய்யப்பட்டது. இதைத்தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

உச்சிப் பொழுதுவரை கடுமையான தாக்குதல், எதிர்த்தாக்குதல் கிளர்ச்சிக்காரர்களது நிலை வீழ்ந்தது. ஏராளமான வீரர்களது எண்ணிக்கையில் மட்டுமல்லாமல் வெடிமருந்து திறன், அதற்குமேலாக சிறந்த போர்ப்பயிற்சியும் பெற்று இருந்த பரங்கிப்படைகளுக்கு எதிரே கிளர்ச்சிக்காரர்களது நாட்டுணர்வும், அந்நிய ஏகாதிபத்திய எதிர்ப்பு இலட்சியமும் உந்து சக்தியாக அமைந்த இந்தப்போர் ஒருநாள் பொழுதுகூட நீடிக்கவில்லை. பரங்கிகளுக்கு ஈடுகொடுக்க இயலாத நூற்றுக்கணக்கான வீரமறவர்கள் தங்களாலான &GL- 6U)LD 6U) Ш நிறைவேற்றிய மனநிறைவில், தங்களது உயிர்க்காணிக்கையைத் தாங்கள் பிறந்த மண்ணிற்கு