பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O4

மறவர் சிமை

அனைத்தையும் அழித்துச் சிதைத்து நாசமாக்கிய அடித்தளத்தில் தங்களது கொள்ளையான செல்வச் சுமைகளை அப்படியே விட்டு உயிர்தப்பினால் போதும் என அவர்கள் தங்களது நாட்டிற்கு விரைந்தோடும் நாள் வரத்தான் செய்யும் கொடுமைகளையும், கொள்கைகளையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு, துன்ப துயரங்களுக்கு ஆற்றாது அழுத அந்த அபலைகளின் கண்ணிர் பரங்கிகளது வெடிமருந்து ஆயுதங்களைவிட பெரும் சக்தி வாய்ந்தது அல்லவா!

தருமமும் தமிழும் தழைத்து வாழ ஆன்மீகமும் சமயப் பொறையும் நிலைத்திடச் செய்யும் சேது மன்னர்களது ஆட்சி, மீண்டும் இந்த புனித சேது மண்ணில் மலரத்தான் செய்யும்.

வண்டிச்சக்கரம் போன்ற வரலாற்றின் கால விளிம்புகள் மீண்டும், மீண்டும், மாறி, மாறி வந்துகொண்டே இருக்கும்.

நலிந்து சிதைந்த ஆசைகள். இடம்மாறி தடுமாறி விட்ட இலக்குகள், மனிதப் பிரயத்தனங்கள், விசுவரூபம் பெற்று மனிதகுலத்தின் சாதனைகளாக, மக்களது வேதனைகளை மறக்கச் செய்யும், மறுபிறவி பெறும் என்பது உறுதி.

"தருமத்தின் வாழ்வுதனைச் சூதுகல்வும் தருமம் மறுபடியும் வெல்லும்" என்பது இயற்கை அல்லவா!