உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 O

மறவர் சீமை

ஆகியவற்றை நீக்கிவிட்டு சென்னையில் உள்ள அவர்கள் நாணயச் சாலையில் தயாரிக்கப்பட்ட (Mint) பொன் நாணயத்தை செலாவணியில் ஈடுபடுத்தினர். இந்த நாணயத்தின் பெயர் பக்கோடா எனப்பட்டது. அன்றைய நாணய மதிப்பில் அந்த பணம் ரூபாய் மூன்றரைக்கு சமமாகக் கருதப்பட்டது. இந்தப் பணத்தின் ஒருபுறம் இந்து சமய கோவிலின் பகுதியான கோபுரம் அச்சடிக்கப்பட்டிருந்ததால், (Bagota) பக்கோடா பணம் எனவும் , மறுபுறம் நட்சத்திரத்தின் சின்னம் அச்சடிக்கப்பட்டிருந்ததால் ஸ்டார் பக்கோடா பணம் எனவும் வழங்கப்பட்டது.

15. பேஷ்கார் :

இது ஒரு பாரசீக மொழிச் சொல். இந்தச் சொல்லுக்கு இணையானதமிழ்ச்சொல் கண்காணிப்பாளர் என்பதாகும். ஆற்காடு நவாப்பின் ஆட்சிக் காலம் முதல் துமிழகத்தில் இந்தச் சொல் வழக்குப் பெற்றது என்றும் திருக்கோயில்களிலும், தர்ம சத்திரங்களிலும் இந்தச் சொல் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

16. மசண்டை :

சூரிய அஸ்தமனத்தை முட்டி உலகை கவிந்துள்ள மெல்லிய வெளிச்சத்தை குறிப்பிடுவது. இதன் விரிவுதான் அந்தி மயங்கும் வேளை ஆகும்.

17. மட்டம் :

+ இளமை வயதினரைக் குறிக்கும் சொல் எடுத்துக்காடடாக வாலிப மட்டம் என்பதாகும்,

18. மறியல் :

அரச நிர்வாகத்தில் பயன்படுத்தப்படுத் சொல். குற்றம் இளைத்தவர்களை

பிடித்துவந்து, விசாரணைக்காக காவலில் வைக்கப்படுவதை இந்த சொல்

குறிக்கினிறது. ஆங்கிலச்சொல்லானRemand என்பதற்கு பொருத்தமான சொல்.

19. மறமான்யம் :

போரின் பொழுது அசாதாண துணிவுடனும், வீரத்துடனும், போரிட்டு, உயிர்த் துறந்தவர்களைப் போற்றும் வகையில் தமிழ் மன்னர்கள் அந்த வீரனின் குடும்பத்திற்கு வழங்கிய மான்யம் (உதவித்தொகை) மறமான்யம் என வழங்கப்பட்டது. இதனை உதிரப்பட்டி என்றும் சொல்லுவர். இத்தகைய அரசு விருது பெற்றவர்களின் வழியினருக்கு பிற்காலங்களில் ஊர்மக்கள் மதிப்பும் மரியாதையும் அளிப்பது வழக்கமாக இருந்தது.