பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன் _59.

9. சிவகங்கைச் செய்தி

பாளையங்கோட்டை.

திருநெல்வேலி நகரை வளைத்துச் செல்லும் தாமிரபரணி நதியின் எதிர்க்கரையில் இருந்த பழையன்கோட்டை என்ற பகுதி நாளடைவில் பெருங்குடி இருப்பாக மாறியது. மதுரை மண்டலத்தில் உள்ள தென்பாண்டி நாட்டுப் பாளையக்காரர்களை வெடிமருந்து ஆற்றல்கொண்டு அடக்கி ஆற்காட்டு நவாப்பிற்குரிய கிஸ்தித் தொகையை வசூலிப்பதற்கு ஆங்கிலக் கிழக்கிந்தியக்

கும்பெனியாரின் கூலிப் படைகளின் நடமாட்டம் கி.பி.1755க்குப் பிறகு அங்கு அதிகமாகியது. அப்பொழுது இந்தக்

கோட்டையை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பெனியார், பலப்படுத்தியதுடன் இதனை மதுரைக்கு அடுத்த பெரிய படைத்தளமாகவும், மாற்றினர். சிறைப் பிடிக்கப்பட்ட பாளையக்காரர்களையும் பாதுகாப்புக் கைதிகளாக அடைத்து வைத்தனர்.

பாஞ்சாலக்குறிச்சிப் போர் தோல்வியில் முடிவுற்றதால் " பாஞ்சைப் பாளையக்காரர் வீரபாண்டியக் கட்ட பொம்முவும், அவரது உறவினர் தோழர்களும் கோட்டையினை

விட்டு ஓடிவந்து சிவகெங்கைச் சீமைக்காடுகளில் தஞ்சம் புகுந்தனர். தொடர்ச்சியாக தொண்டைமான்

36. Dr. K. Rajaiyan - History of Madurai 1972.