பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சம் நிறைந்த நன்றி

கடல் கடந்து மலேயா நாட்டின் பெட்டாலிங் ஜெயாவில் வாழ்ந்தாலும், கன்னித் தமிழ்நாட்டின் கவின்மிகு பெருமையையும், புகழையும் காலமெல்லாம் பறைசாற்ற வேண்டும் என்ற பெரு விருப்புடன் இந்த நூலின் ஆக்கத்திற்கு பெரிதும் உதவிய அல்ஹாஜ் கரீம் கனி அவர்களுக்கும்,

சேதுநாட்டின் வீர வரலாற்றை வகைப்படுத்தி முறையாக தொகுத்து வெளியிட வேண்டும் என்ற முயற்சியில் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்து வரும் முன்னாள் வட்டாச்சியரும், தமிழக அரசின் சமுதாய ஒற்றுமைக்கான விருது பெற்றவருமான திரு. எஸ். துரைராஜ் அவர்களுக்கும்,

இந்நூலை எழுதத் துணை புரிந்த சென்னை ஆவணக் காப்பகப் பணியாளர்களுக்கும் குறிப்பாக ஆராய்ச்சி அலுவலர் திரு.M.S. பாண்டியன் அவர்களுக்கும்,

இந்த விடுதலை வரலாற்றின் தட்டச்சுப் படிகளையும், அச்சுப் பிரதிகளையும், அக்கறையுடனும், பொறுமையுடனும் சரிபார்த்து மெய்ப்புக்களை திருத்தி உதவிய இராமநாதபுரம் தமிழ்ப் பேராசிரியர் மை. அப்துல் சலாம் அவர்களுக்கும், பேராசிரியர் க. ஜீவானந்தம் அவர்களுக்கும்,

இந்த நூலின் கையெழுத்துப் பிரதிகளைப் படியெடுத்து உதவிய செல்வி ஆர்.சுமதி, செல்வி எஸ். கவிதா ஆகியோருக்கும்,

இந்த நூலினை குறித்த காலத்திற்குள் செம்மையாக அச்சிட்டு வழங்கிய இராமநாதபுரம் அருண் ஆப்செட் அச்சகத்தாருக்கும்.

எனது நெஞ்சம் நிறைந்த நன்றிப் பெருக்கினை இங்கு புலப்படுத்திக் கொள்கிறேன்.

Dr. S.M. csuomeo 30 டிசம்பர் 2001