பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்= - - ={*

இராமநாதபுரம் கலெக்டர் ஊர்களில் பிரசித்தம் செய்த அறிவிப்பும் அமைந்து இருந்தது. போராளிகளான பாளையக்காரர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்களுக்கு எவ்வித உதவியும், ஒத்துழைப்பும் புகலிடமும் அளிக்கக்கூடாது. மீறினால் விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்பது அந்த அறிவிப்பு. நாகலாபுரத்தில் இருந்து 12.13.1801 கமுதிக்கு வந்த துணைக் கலெக்டர் மில்லர் தனது போர் வீரர்களை மண்டலமாணிக்கத்திற்கு அனுப்பினான். அங்கு தங்கி இருந்த பாஞ்சை சிவகெங்கை கடிதப் போக்குவரத்தை நடத்தி வந்த சுப்பையரையும் அவரது ஆறு உதவியாளர்களையும் கைது செய்து இராமநாதபுரம் கோட்டையில் அடைக்குமாறு செய்தான். நெல்லைச் சீமைச் செய்திகளைப் பெறுவதற்கான இந்த ஏற்பாடும் செயலிழந்து போயிற்று.

இதைவிடக் கொடுமையானது சுப்பையரது வாக்குமூலம். வன்முறைக்கு ஆளான சுப்பையர் வேறு வழியில்லாது தம்மைக் காத்துக் கொள்வதற்கு வாய்விட்டு உண்மைகள் அனைத்தையும் கொட்டிவிட்டார். இராமநாதபுரம் சீமைக்கிளர்ச்சியில் பங்குபெற உள்ள மயிலப்பன் சேர்வைக்காரரைப் பற்றியும், அவருக்கு உதவிவரும் சிவகெங்கைச் சீமைப் பிரதானிகள் பற்றியுமான அனைத்துச் செய்திகளையும் கும்பெனியார் அறிந்துகொண்டு, தங்களது தரப்பை எதிர்நடவடிக்கைகளுக்கு எளிதாக உட்படுத்திக் கொள்ள உதவியது.

அடுத்து சித்திரங்குடி சேர்வைக்காரரது அணி கமுதிக் கோட்டையைத் தாக்கியது. துணைக் கலெக்டரது மூர்க்கத்தனமான பீரங்கித் தாக்குதல் கிளர்ச்சிக்காரர்களைத் தடுமாறச் செய்தது. பரங்கியரது கை ஓங்குவதற்கு ஏற்றாற்போல் இராமநாதபுரத்திலிருந்து வந்த புது அணியும் கோட்டைப் பாதுகாப்பிற்கு உதவியது. தங்களது திட்டத்தைக் கைவிட்டு வடகிழக்கே காட்டுப்பகுதிக்குள் பின்னடைந்து பரமக்குடி நோக்கிச் சென்றனர். ஆனால், கர்னல்