பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிச்சேரி 3O.12.2OO1

முனைவர் கோ. விசய வேணுகோபால்

முதுநிலை ஆய்வாளர், பிரெஞ்சு இந்தியவியல் ஆய்வகம்.

அணிந்துரை

கி.பி.பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டம் ஆங்கிலேயரின் கை ஓங்கத் தொடங்கிய காலம். சிற்றரசுகளிடையே பிளவும் மக்களிடையே ஒற்றுமைக் குறைவும் நாடு அடிமைப்படக் காரணங்களாக அமைந்தன.

ஆங்கிலேயர் தமது பிரித்தாளும் சூழ்ச்சி எனும் உத்தி வழி மெல்ல மெல்ல நாட்டைத் தங்கள் வசம் மேற்கொள்ளும் பணி தொடர்ந்து கொண்டிருந்தது. இருப்பினும் தென்னகத்தே விடுதலை உணர்வும் ஆங்கிலேய எதிர்ப்பும் ஆங்காங்கே உருவாகி நாடு கொந்தளிப்பான, சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது

இராமநாதபுரம், பாஞ்சாலங்குறிச்சி சிவகங்கைச் சீமைகளில் இச்சூழ்நிலையைக் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் காண்கிறோம். இராமநாதபுரம், சேதுபதி மன்னர் சிறை வைக்கப்பட்டு இருந்தார்.

இக்காலகட்டத்தே சேது சமஸ்தானப் பகுதிகளில் ஆங்கிலேய எதிர்ப்பைத் தெரிவிக்கும் முயற்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மறவர் சீமையைச் சேர்ந்த மயிலப்பன் என்பவரின் தனித்த முயற்சியுடன் தென்பாண்டிச் சீமை போராட்ட வரலாறு இந்நூலில் நண்பர் எஸ்.எம்.கமால் அவர்களால் விளக்கப்பட்டுள்ளது. கி.பி.17991802 ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகளையும், போராட்டங்களையும்

VII