பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புரை

‘மறுமலர்ச்சிக் கவிஞர்கள்’ என்ற இந்நூலில், இந்த நூற்றாண்டுக் கவிஞர் நால்வருடைய கவிதையை, ஆசிரியர் அ. திருமலை முத்துசுவாமி ஆராய்கிறார். நம்முடைய காலத்திலேயே முளைத்து, நமது தனிவாழ்க்கையோடு பிணைந்து, நமது விருப்பு வெறுப்புக்களைத் தூண்டுகின்ற கொள்கைகள், சமுதாய நிலைகள், அரசியல் போராட்டங்கள், தத்துவங்கள், புரட்சிகள், உடன்பாடுகள்—இவையே பெரும்பாலும் இந்நான்கு கவிஞர்களும் பேசுகின்ற பொருள்கள் ஆகும். இதனால், நமது விருப்பு வெறுப்பிலிருந்து விடுபட்டு, கவிதையைக் கவிதையாகத் துய்ப்பது கடினமான முயற்சியாகி விடுகிறது. இம்முயற்சியை மேற்கொள்கிறார் ஆசிரியர் திருமலை முத்துசுவாமி. அவருடைய முடிவுகள் அனைத்தையும் அப்படியே ஏற்கவேண்டும் என்பதில்லை. கவிதையைத் தராசிலேயா நிறுக்கிறோம், இல்லையே? உள்ளத்திலன்றோ எடை போடுகிறோம்? ஆகவே திறனாய்வாளர் வெவ்வேறு முடிவுகளை அடைவது இயல்பு. முடிவு எதுவானாலும், அதை நோக்கிச் செல்லும் பாதையிலே நடப்பதில் பயனுண்டு. தமிழ்க் கவிஞர் நால்வருடைய பாடல்களோடு ஆர்வத்துடன் பழகி, இன்பம் பெற்ற ஓர் உள்ளத்தின் சாயலே இந்நூலில் அமைகின்ற பாதை. இந்தப் பாதை, பாரதி, தேசிக விநாயகம் பிள்ளை, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ஆகிய நால்-