பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இதுதான் ஏற்ற சமயம் என்று பாரதியார் எண்ணிஞர் : பாரதிதாசனைப் பாடுமாறு தூண்டினர். பாரதிதாசன் உடனே சொல்லிவைத்தாற் போல, ' எங்கெங்குக் காணினும் சக்தியடா......” எனத் தொடங்கும் பாடலைப் பாடினர். , பாட்டின் பொருளும் போக்கும் பாரதியாரையும் கூடியிருந்தோரையும் பெரிதும் கவரலாயின. உடனே பாரதியார், அக்கவிதையைச் சுதேசமித்திரனுக்கு அனுப்பி வைத்தார். அது முதல் பாரதியாரும் பாரதி தாசனும் நெருங்கிய நண்பர்களாயினர். பின்னர் பாரதிதாசன் நூற்றுக் கணக்கான பாடல் களைப் பாடலானர். இருபதாம் நூற்ருண்டுக் கவிஞர் களிலே அதிகமான பாடல்களைப் பாடியவர் பாரதி தாசனே. தொடக்கத்தில் பாரதிதாசன் கடவுட்பற்று மிக்கவ ராக இருந்து பின்னரே நாத்திகரானர். சாதி, சமயம், மூட நம்பிக்கைகள். புராணங்கள். ஆகியவற்றைப் ாரதிதாசனப் போல எவரும் கண்டித்திலர் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் தமிழ் மக்கள் அவருக்கு மணிவிழாக் கொண்டாடி, பொன் குடை போர்த்திப் பொற்கிழி யளித்துத் தம் நன்றியறி தலைத் தெரிவித்துக் கொண்டனர் சிறிதுநாள் வரையிலும் இவர் புதுவைச் சட்ட மன்றத்தில்ே உறுப்பினராக இருந்தார். இடையிலே சில: