பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 225


உடலின் அடிப்படை உறுப்புக்கள் உறுதியாக இருந்து. உழைத்துக் காப்பாற்றுகின்றன.


அந்த அடிப்படை தான் செல்கள் (Cells).


ஒரு செல்லானது இரண்டாகப் பிரிந்து வளர்கிறது. அம்சி இரண்டும் இரண்டு இரண்டாகப் பிரிகின்றன. இந்தி ‘ம் றத்தை செல் பிரிவு பிளப்பும், வளர்ப்பும் στσότ η) அழைக்கப் படுகிறது. அதாவது செல் வளர் சிதை மாற்றம் என்பது: அதை ஆங்கிலத்தில் Metabolism என்று கூறுவார்கள்.


இந்த செல் வளர் சிதை மாற்றம் சிறப்பாக, செழுமை யாக உடலில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் ‘’ இளமை உடலை விட்டு விடாது, ஒட்டிக் கொண்டே


இருக்கும்.


இந்த செல் வளர் மாற்றம் குறைகிற போது, இளமை உடலை விட்டு விடை பெற்றுக் கொள்கிறது.


ஆமாம்! உடல் உழைப்பால் செல்கள் தேய்கின்றன. பழுது படுகின்றன. உடைந்து போகின்றன. அவற்றை மாற்றி, புதுப்பித்து, பழுது பார்க்கும் வேலை ந-ை பெற வேண்டாமா? அந்த வேலையைத்தான் மெட்டபாலிசம் செய்கிறது.


அதற்கு உடற் பயிற்சி முறைகள் நன்கு உதவுகின்றன.


எலும்பின் கனமும் வலிமையும் செழிப்பாக இருக்கும் வரை, உடல் இளமைக் கட்டுக்குள் எழிலோடு இருக்கும்.


எலும்பு வலிமையை இழக்கிற போது, உடல் குனிந்து கொள்கிறது. வளைந்து கொள்கிறது. வனப்பை இரிக்கிறது.