பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

33



நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டப் பரம் பரையில் வந்தவர்கள். முற்போக்கு எண்ணமில்லாதவர்கள் மத்தியிலே வாழ்பவர்கள். நாங்கள் எப்படி சாதனை செய்ய முடியும் என்று கேட்கலாம்.


ஜெசி ஒவன்ஸ் என்ற அமெரிக்க வீரன். நீக்ரோ என்ற கருப்பர் இனத்தைச் சேர்ந்தவன். வறுமை வாழ்விற்குள்ளே வதைப்பட்டுக் கிடந்தவன்.


உண்பதற்கு ஒன்றுமே இல்லாமல், உருளைக் கிழங்கு தோல்களையும் உண்டு ஜீவித்தவன். சுற்றுப் புறத்து மக்கள் கொடுத்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒட்டப் போட்டிக்குப் போயிருக்கும் நேரத்தில் கூட, ஒட விடாமல் தடுத்திட, ஒராயிரம் உபாயங்களைச் செய்தனர் பலர். அப்படியிருந்தும் அவர்கள் செய்த தந்திரத்தில், பண்ணிய சூழ்ச்சியில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து, முதுகு அடி பட்டு, நிற்கக் கூட முடியாத நேரத்தில் கூட... அவன் சோர்ந்து போய் விடவில்லை. .


முதுகு வலி இருந்த போதும், முனகிக் கொண்டு மூலை யில் கிடக்காமல், வெற்றி ஒன்றே லட்சியம் என்ற வேகத்தி னால் வேதனைகளை மறந்து, பெரிய ஒடுகளப் போட்டி ஒன்றில் ஒரு நான்கு மணி நேரத்திற்குள்ளாக, 4 போட்டி களில் கலந்து கொண்டு உலக சாதனை செய்த மாவீரன் ஜெசி ஒவன்ஸ்.


கொடுங்கோலன், காண்பவர்கள் குலை நடுங்க நட மாடும் அலங்கோலன், சாம்ராஜ்ய வெறிபிடித்த சக்ரவர்த்தி இட்லர், அவனை அவமானப்படுத்தி, ஒட்டப் பந்தயத்தில் வெற்றிபெற விடாமல் முயற்சி செய்தான். அப்பொழுதும் ஜெசி ஒவன்ஸ் தனது முயற்சிகளில் பின் வாங்காமல், 4 போட்டிகளில் வென்று, ஒலிம்பிக் சாதனை செய்து, உல