உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மறைமலையம் -10

என

வருங்கால் எங்ஙனம் வருகின்றன?' சுவேதகேது 'அறியேன், ஐய, அரசன்: ‘தேவர்கள் பாற் செலுத்துவதும், பிதிரர்கள்பாற் செலுத்துவதுமான இரண்டுவழிகள் பிரியுமிடம் நினக்குத் தெரியுமா?' சுவேதகேது; 'தெரியேன், ஐய' அரசன்: 'மக்கள் இறந்த பிற் செல்லும் உலகு ஏன் நிறைக்கப்படுதல் இல்லை?' சுவேதகேது : 'அறியேன், ஐய, அரசன்: "ஐந்தாம் வேள்வியிற் புனல்கள் ஏன் ‘புருஷன்' என அழைக்கப்படுகின்றன?" சுவேதகேது: 'அறியேன், 'ஐய’ அரசன் : ‘அற்றேல் நீ ஏன் மெய்யறிவு புகட்டப்பட்டேன் என்றனை? இவை தம்மை யெல்லாம் அறியாதான் ஒருவன் அறிந்தேன் எனக் கூறுதல் கூடுமோ?' அதுகேட்ட அவ்விளையன் மனம் வருந்தினோனாய்த், தன் றந்தைபாற்சென்று ‘எனக்கு நீர் மெய்ப்பொருள் தேற்றா திருக்கையிலேயே அது தேற்றினேன் எனப் புகன்றீர். அந்த ராஜந்யன் என்னை ஐந்து வினாக்கள் வினாயினான்; அவற்றுள் ஒன்றற்கேனும் விடைசொல்லத் தெரிந்தேனில்லை,' விளம்பினான். அதற்கவன் றந்தை, ‘நீ கூறிய அவ்வைந்து வினாக்களில் ஒன்றுக்குக் கூட எனக்கு விடை தெரியாதே. யான் அவற்றை அறிந்திருந்தால் உனக்குச் சொல்லாமலிருப்பே னன்று எண்ணுகின்றனையா?' என மொழிந்தார். அதன்பிற், கௌதமர் அவ் வேந்தன் பாற் செல்ல, அவன் அவரைச் சிறப்புடன் வரவேற்றான்.மறுநாட்காலையில் அரசனால் அழைக்கப்பெற்று. அவர் அவனெதிரே போக, அவன் ‘மாட்சிமை தங்கிய கௌதமரே! மக்கள் வாழ்க்கைக்குரிய செல்வத்தில் நுமக்கு வேண்டியது கேளும்' என நுவன்றான். கௌதமர் 'மன்னர்பிரானே! அச் செல்வம் நுமக்குத்தான் உரியதாகற்பாலது; என் மகனைக் கேட்ட கேள்விகள் ஐந்திற்கும் விடைதாம் எனக்கு வேண்டும்,' என வேண்டினர். அதன் மேல் அரசன் மனந் திகைத்து, அவரை நெடுநாள் தனதரண்மனையிலிருக்கும்படி யிட்டான். பின்னர் ஒருநாள் அவரை வருவித்து, 'ஓ கௌதமரே! ம் மெய்யுணர்வு உமக்கு முன்னிருந்த பார்ப்பனரை அணுகியதில்லையென நீர் எனக்கு மொழிந்த வண்ணமே, மற்றை எல்லா வகுப்பினருள்ளும் க்ஷத்திரிய வகுப்பினராகிய அரசராலேயே இ ஃது அறிவுறுக்கப்பட்டு வருவதொரு மெய்க்கல்வியாகும் எனக் கூறி, அதனை அவர்க்குச் செவியறிவுறுத்தினான்” என்பது (சாந்தோக்கியம், 5-3-1 )

இம்

கட்ட

ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/139&oldid=1579764" இலிருந்து மீள்விக்கப்பட்டது